மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் பலி: இருவர் காயம்! –

தம்புள்ளை – களுந்தேவ – பரணகம பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் வீதியைவிட்டு விலகி மரமொன்றுடன் மோதிக் கால்வாயில் வீழ்ந்து விபத்து சம்பவித்துள்ளது.
இரண்டு மோட்டார் சைக்கிளில் ஆறு மாணவர்கள் நேற்று பிற்பகல் தம்புள்ளை – களுந்தாவ கால்வாய் வீதியில் நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, விபத்துக்குள்ளான உந்துருளியில் பயணித்த மூன்று மாணவர்களில் ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அதில் பயணித்த மற்றைய மாணவர் சம்பவ இடத்திலிருந்து, களுந்தேவ கால்வாயில் சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புள்ளை பஹல அரவுல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதான மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews