பிரபாகரனை விட ராஜபக்ஷக்களே நாட்டுக்கு தீங்கிழைத்துள்ளனர்: சம்பிக்க –

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை விட ராஜபக்ஷக்களும் அவர்களது சகாக்களும் நாட்டுக்கு தீங்கிழைத்துள்ளார்கள்

என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘துறைசார் நிபுணர்களையும், திறமையானவர்களையும் அமைச்சுக்களின் செயலாளர்களாகவும், அரச நிறுவனங்களின் தலைவர்களாகவும் நியமிக்க முடியாத நிலையில் ஜனாதிபதி உள்ளார்.
திறமையானவர்களுக்கு முன்னுரிமை என ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி வெறும் தேர்தல் பிரசாரம் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் தற்போது நன்கு விளங்கிக் கொண்டுள்ளார்கள்.
நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பயனற்ற அபிவிருத்தி திட்டங்கள் மூல காரணியாக காணப்படுகிறது.
இந் நிலையில் நாடு எதிர்க்கொண்டுள்ள நிலைமைக்கு ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் உட்பட ராஜபக்ஷ குடும்பமே பொறுப்புக் கூற வேண்டும்.
தற்போதைய அரச முறை கடன் நெருக்கடிக்கு 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பெற்றுக் கொள்ளப்பட்ட வணிக முறைகடன்கள் தற்போதும் தாக்கம் செலுத்துகிறது.
வருமானத்தை ஈட்டித்தராத அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், அதிவேக நெடுஞ்சாலை, விளையாட்டு மைதானம், தாமரை தடாக அரங்கம் உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்கள் நாட்டுக்கு எவ்வித இலாபத்தையும் பெற்றுக் கொடுக்கவில்லை.
இந்த அபிவிருத்தி பணிகள் ஊடாக அரச நிதி பாரிய அளவில் மோசடி செய்யப்பட்டுள்ளன’ எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ள

Recommended For You

About the Author: Editor Elukainews