அரச ஊழியர்கள் சிறைக்கு செல்லவேண்டி ஏற்படும்! விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை.

அரச ஊழியர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் செய்தால் சிறைச்சாலை செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாடு தற்போதுள்ள நிலையில் அரச ஊழியர்களுக்கும் சம்பளம் குறைக்கலாமே தவிர அதிகரிக்க முடியாது. இக்கட்டான சூழ்நிலையில் அதற்காகப் போராட்டம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்தப் பிரச்சினைக்கு அடுத்த வருடம் தீர்வு கிடைக்கும். நாட்டில் வேலை செய்கின்ற அனைத்து ஊழியர்களுக்கும் இப்போது சம்பளம் குறைக்க வேண்டுமே தவிர அதிகரிப்பு இல்லை.

தற்போது பேசப்படும் விடயம் டொலர் பற்றாக்குறை. வெளிநாட்டு பங்களிப்பு,எரிவாயு வெடிப்பு பிரச்சினைக்கு ஜனவரியில் தீர்வு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin