உறவினர்களால் கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட 25 வயது இளைஞர்!பின்னணியில் வெளியான தகவல்.

பதுளையில் பித்தளைப் பாத்திரங்களால் தாக்கப்பட்டு இளைஞரொருவர் கொல்லப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் பதுளை – ஒலியமண்டிய பிரதேசத்தில் உள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமணமான 21 வயதான குறித்த இளைஞர்  மற்றுமொரு 21 வயதுடைய பெண்ணை இரண்டாவது முறையாக திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையிவ் 21 வயதான தமது மகள் காணாமல்போயுள்ளதாக குறித்த பெண்ணின் தாயாரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது இரண்டாவது மனைவியின் தந்தைக்கும் குறித்த இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குறித்த இளைஞர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக இரண்டாவது மனைவியின் தந்தை, தாய் மற்றும் அவரது இளைய சகோதரர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,எதிர்வரும் மூன்றாம் திகதி வரையில் விளக்கமறியல் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin