கிளிநொச்சியில் நத்தார் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன

கிளிநொச்சியில் நத்தார் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன. கிளிநொச்சியில் உள்ள அனைத்து கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றது. 

இரவு ஆரானைகளும், காலை ஆராதனைகளும் ஆலயங்களில் இடம்பெற்றன. இதேவேளை நத்தார் அலங்கரிப்புகளும் பரவலாக காட்சியளித்தது.

கிளிநொச்சி அங்கிலிக்கன் திருச்சபை நத்தார் வழிபாட்டில் மக்கள் கலந்துகொண்டனர். இதன் போது அருட்தந்தை டானியல் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.

முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் இடம்பெற்ற விசேட வழிபாட்டில் மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது திருப்பலியினை வண பிதா ஜோன் தேவசகாயம் ஒப்புக்கொடுத்தார். பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் மக்கள் சிறப்பாக நத்தார் பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர்.

Recommended For You

About the Author: admin