இருளில் மூழ்கப் போகும் இலங்கை – நெருக்கடியான நிலையில் அரசு –

எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தற்போதுள்ள எண்ணெய் இருப்பு ஜனவரி நடுப்பகுதி வரை மாத்திரமே போதுமானது என பட்டலி சம்பிக்க ரணவக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தற்போதுள்ள எண்ணெய் இருப்பு ஜனவரி நடுப்பகுதி வரை மாத்திரமே போதுமானதாக இருக்கும். அதற்கமைய டிசம்பர் மாதம் 10ஆம் திகதி சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் செயல்படத் தொடங்கினாலும், மின் உற்பத்திக்கான இருப்பு 16,000 மெட்ரிக் டன்னாகவும், மின் உற்பத்திக்காக நாளொன்றுக்கு வெளியிடப்படும் எண்ணெயின் அளவு 500 மெட்ரிக் டன்னாகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பயன்படுத்தப்பட்டாலும், அது 25 நாட்களுக்கு மாத்திரமே போதுமானதாக இருக்கும். மின் உற்பத்திக்காக 12,500 மெட்ரிக் டன் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மாத்திரமே உள்ளது.

இதேவேளை, இலங்கை மின்சார சபையிடம் 21,200 மெற்றிக் டன் எண்ணெய் மாத்திரமே சேமிப்பில் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் போதியளவு எண்ணெய் கையிருப்பு இல்லாத காரணத்தினால் அடுத்த மாதம் மூடப்படவுள்ளதுடன், இந்த நிலையில் மின் உற்பத்திக்கான சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை வெளியிடுவது நிறுத்தப்படக்கூடும்.

இதன் காரணமாக எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடை செய்யப்படும். தற்போது வரையிலும் நாட்டின் பல பகுதிகளில் 45 நிமிடங்களுக்கு அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பது மனித உரிமைகளை மீறும் சட்ட விரோதச் செயலாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews