நாடளாவிய ரீதியில், கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் பாதிக்கப்பட்ட நிலையில் சுமார் 175 பேர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று நடந்த விபத்துக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 22 சதவீதம் அதிகமாகும் என்று பேச்சாளர் கூறினார்.
இதற்கமைவாக வீதி விபத்துக்களினால் பாதிக்கப்பட்ட 31 பேரும் வீடுகளில் இடம்பெற்ற விபத்துக்களில் பாதிக்கப்பட்ட நிலையில் 26 பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை தவிர ஏனைய விபத்துக்களில் பாதிக்கப்பட்ட மேலும் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.