தேசிய தொழில் வழிகாட்டல் வார விருது வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் நேற்று இடம் பெற்றுள்ளது.

தேசிய தொழில் வழிகாட்டல் வார விருது வழங்கும்  நிகழ்வு நேற்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலைய கட்டட தொகுதியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது தேசிய தொழில் வழிகாட்டல் வாரத்தையொட்டி பாடசாலை மாணவர்களிற்கிடையில் பிரதேச செயலாளர் பிரிவுகள் அடிப்படையில் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கு சான்றிதழ்களும், காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
கவிதை, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் முதல் மூன்று இடங்களையும் பிடித்த மாணவர்களு இவ்வாறு நேற்றைய தினம் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன். கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், உதவி பிரதேச செயலாளர்கள், கிளிநொச்சி வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews