முரளீதரனை விசாரணைக்கு  வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பு..!

சமூக செயற்பாட்டாளரும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவரும், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவரும், ஊடகவியலாளருமான  இரத்தினசிங்கம் முரளிதரனை எதிர்வரும் 20/07/2025 அன்று காலை 9:00 மணிக்கு பரந்தனிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு தொலைபேசியூடாக அழைப்பு விடுத்துள்ளது.
இவர் காணி உரிமை, மீனவர்கள் உரிமை, உட்பட பல்வேறு  போராட்டங்களை முன்னெடுத்துவருபவர் என்பது குறிப்பிட தக்கது..

Recommended For You

About the Author: Editor Elukainews