கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான அபிவிருத்திக்  குழுக்கூட்டம்.!

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான அபிவிருத்திக்  குழுக்கூட்டம் கரைச்சி பிரதேச செயலாளர் திரு முகுந்தன் தலைமையில் நடைபெற்றது இதன்போது கிளிநொச்சி  மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கரைச்சி பிரதேச சபையில் தவிசாளர் அருணாசலம் வேல மாளிதன் பிரதேச சபையின் உறுப்பினர்கள் போலீசார் மற்றும் இரானுவத்தினர் அரச திணைக்களங்களின் அதிகாரிகள் கிராமவையாளர் விவசாயிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்
இதன் போது மக்கள் தமது கருத்துக்களை தெரிவிக்கையில் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் பல வருட காலமாக குடியிருப்பதற்கு சொந்தமாக ஒரு காணி கூட இல்லாதவர்களுக்கு மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்றைய நிகழ்ச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின் தீர்மானங்களுக்கு அமைவாக அப்பகுதியில் வாழ்கின்ற காணி இல்லாத 125 குடும்பங்களுக்கு அப்பகுதியில் உள்ள அரச காணியினை அந்த மக்களுக்கு பகிர்ந்து அளிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என தீர்மானங்கள் எட்டப்பட்டன
கிளிநொச்சி நகரப் பகுதியில் அமைந்துள்ள பல அரச காணிகள் இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ளதாகவும் சில காணிகள் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் மாவட்ட அரசாங்க அதிபரிடமோ அல்லது பிரதேச செயலாளரிடமும் கையளிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன இவைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி விடுவிக்கப்படாத காணிகளை விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கைவிடப்பட்டிருக்கின்ற காளைகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்
அத்துடன் கிளை நொச்சி நகரப் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கடவைகள் பல பகுதிகளில் பழுதடைந்தும் பாதுகாப்பு கடமைகள் இல்லாத காரணத்தினால் பல உயிர்கள் காவு கொள்ளப்படுவதாகவும் இதற்கு தீர்வு காணும் வகையில் உடனடியாக பாதுகாப்பு கடமைகளை அமைக்க வேண்டுமென பொது அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக பாதுகாப்பு கடமவைகளை உரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கடை தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் தெரிவித்தார்
கலைநொச்சி அக்கறையான் பகுதியில் பல குடும்பங்கள் சுத்தமான குடிநீரை பெற முடியாத நிலையில் தண்ணிக்கு அல்லது வருவதாகவும் இதற்கு உரிய தீர்வு எட்டப்பட வேண்டும் என பொது அமைப்புகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக தற்காலிகமாக பிரதேச சபையின் ஊடாக மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை உடனடியாக வழங்குவதற்காக பிரதேச சபையின் தவிசாளர் வேலமாளிதன் இனக்கம் தெரிவித்தார்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இம்முறை வடபகுதிகளுக்காக 13 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது இவைகளை மக்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே எமது நோக்கம் எனவும் அவ்வாறு செய்வதன் மூலமாக நாட்டில் உள்ள பல்வேறு வகையான தேவைகளை கண்டறிந்து பூர்த்தி செய்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயிர் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்
அத்துடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன

Recommended For You

About the Author: Editor Elukainews