குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு

குளவிக்கொட்டுக்கு இலக்காகிய பெண்ணொருவர் இன்றையதினம் (03) தெல்லிப்பழை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது செட்டிக்குறிச்சி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த குணசேகரம் வரதசுரோன்மணி (வயது 67) என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் நேற்று முன் தினம்... Read more »

மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு 

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையானது இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அந்த வகையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.02 அமெரிக்க டொலராக அதிகரிதுள்ளது அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.24... Read more »

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணி நாளை…!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வின் மூன்றாம் கட்டப்பணிகள் நாளையதினம் (04) மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.   முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு மே மாதம் (16) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு ஜீலை மாதம் 04 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும்... Read more »

கொலைக் குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது…!

மருதங்கேணி பகுதியில் தீயில் எரிந்து மரணமான  சரவணபவானந்தம் சிவகுமார் மரணம் தொடர்பில் பெண் ஒருவர் நேற்று சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த 20 திகதி தனது வத்திராயனில் வசித்த வீடு ஒன்றில் இரவு வேளை தீக்காயங்களுக்கு... Read more »

சம்பந்தன் ஆற்றிய தொண்டு பாராட்டத்தக்கது. அதை யாரும் மறுக்க முடியாது – வீ.ஆனந்தசங்கரி.

சம்பந்தன் ஆற்றிய தொண்டு பாராட்டத்தக்கது. அதை யாரும் மறுக்க முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் முன்னாள் பாராளுமன்) உறுப்பினர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் ஊடகங்களுக்கு வழங்கிய இரங்கல் செய்திக் குறிபிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்து... Read more »

பெண்களுக்கு விசேட கடன் திட்டம்! வெளியான மகிழ்ச்சி செய்தி

பெண்கள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உள்ள தடைகளை நீக்கும் வகையில் விசேட கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2 பில்லியன் ரூபா ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, இலங்கையின் பொருளாதார விவகாரங்களில் பெண்களின் பங்களிப்பு ஏனைய பிராந்திய மற்றும் ஆசிய நாடுகளை விட... Read more »

நயினாதீவு நோக்கி சென்ற படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

நயினாதீவு நோக்கி சென்ற படகில் பயணித்த ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த அருண் என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார். பொருட்களை ஏற்றிச் சென்ற படகு பாரத்தினால் கடலில் கவிழ்ந்தது இந்நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக... Read more »

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை…!

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றையதினம்(02) பாடசாலை நேரம் முடிந்ததும் பாடசாலைகளுக்கு முன்பாக ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில் தொடர் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தது இந்நிலையில், தங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால், பாடசாலை நேரத்தில் போராட்டம் நடத்தப்படும்... Read more »

ரணிலுக்கு நிபந்தனை விதித்த மொட்டுக் கட்சி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தினை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவது தொடர்பில் பரிசீலனை செய்யப்படும் என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.   எதிர்வரும் ஜனாதிபதித்... Read more »

இஸ்ரேலிய வீடுகளை உடைத்து திருட்டு; நாடு கடத்தப்படவுள்ள 4 இலங்கையர்கள்

இஸ்ரேலுக்கு பணிக்காக சென்ற 4 இலங்கையர்கள் திருட்டு குற்றச்சாட்டில் இஸ்ரேல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட பொருட்களில் கையடக்கத் தொலைபேசிகள், மடிக்கணினிகள், மதுபான போத்தல்கள், கமராக்கள் மற்றும் தங்கம் என்பன அடங்குவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். லெபனான் எல்லையில் உள்ள... Read more »