சாவகச்சேரியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மன்னாரில் மீட்பு!

சாவகச்சேரியில் கடந்த திங்கட்கிழமை திருடப்பட்ட மோட்டார்சைக்கிள் சாவகச்சேரி பொலிஸாரின் துரித முயற்சியால் மன்னாரில் வைத்து மீட்கப்பட்டது. சாவகச்சேரி நகரப் பகுதியில் உள்ள மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெறச்சென்ற ஒருவர் தனது மோட்டார்சைக்கிளை அங்கு நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். திரும்பிவந்து பார்த்த போது மோட்டார்சைக்கிள் திருடப்பட்டிருந்தது.... Read more »

பிறப்புரிமையான சுதந்திரத்தை எவரும் எழுதித்தர வேண்டியதில்லை – யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவிப்பு!

சுதந்திரம் எங்களது பிறப்புரிமை. அதை இன்னொருவர் எமக்கு எழுதித் தரவேண்டிய அவசியமில்லை. அதை இன்னொருவர் பறிக்கவும் முடியாது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறையின் அரசறிவியல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் “அரசறிவியலாளன் இதழ் 6” நூல் வெளியீட்டு விழா... Read more »

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக பொலிசார் எச்சரிக்கை

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், பணத்தை கையாள்வதில் கவனமாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் போலி நாணயத்தாள்களை  மாற்றுவதற்கு நபர்கள் வரலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா... Read more »

நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இளைஞர்களின் முன்மாதிரியான செயல்!

அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் விலங்குகளின் நீர்த் தேவையை பூர்த்திசெய்யும் பொருட்டு வவுனியா – மன்னார் வீதியின் சில பகுதிகளில் மண் சட்டி மற்றும் சிரட்டைகளைப் பயன்படுத்தி இளைஞர்களினால் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தண்ணீர் தொட்டிகளை அமைத்து இந்த வெப்பகாலத்தில் பறவைகள்,  விலங்குகளுக்கு... Read more »

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு..!

மாத்தறை – கனங்கே பகுதியில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றின் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவமானது, இன்று அதிகாலை  இடம்பெற்றுள்ளது. கனங்கே – ரஜமஹா விகாரைக்கு அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், பசு மாடொன்றை ஏற்றிச் சென்ற... Read more »

புத்தாண்டுக்கு முன்னர் 30 இலட்சம் குடும்பங்களுக்கு 10Kg அரிசி…!

அரசாங்கத்தினால் 10 கிலோகிராம் வீதம் 30 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அரிசியை புத்தாண்டுக்கு முன்னதாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். இதனை இம் மாதம் 21ஆம் திகதி மற்றும் மே மாதத்தில் வழங்குவதற்கு அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டிருந்தாகவும், எவ்வாறாயினும், புத்தாண்டுக்கு முன்னர்... Read more »

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிற்றல் மையம் , நூலக நுழைவு  தோரண வாயில் திறப்பு!

தெல்லிப்பழை பொது நூலகமானது  டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு , நூலக நுழைவு வாயில்  போன்றவற்றின்  அங்குராற்பணம் நேற்று(10) இடம்பெற்றது. நேற்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வானது வலி வடக்கு பிரதேச செயளாளர் சு.சுதர்ஜன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்குப்  பிரதம விலுந்தினராக வடமாகாண உள்ளூராட்சி... Read more »

கொழும்பில் மூவர் கைது

கொழும்பு, மருதானை பகுதியில் வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த டீ – 56 ரக துப்பாக்கி உள்ளிட்ட வெடிபொருட்களுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது... Read more »

கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

மீகஸ்பிட்டிய, உரகஸ்மன்ஹந்தியவில் உள்ள ஸ்டிக்கர் கடை ஒன்றில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று (11) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கடையின் உரிமையாளரின் மனைவியான 41 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம்... Read more »

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்கள் மீட்பு..!

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட 8 இலங்கையர்களும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதுவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் சில தினங்களில் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார். அத்துடன், மியான்மரில் தாய்லாந்து எல்லையில் ஆயுதம் ஏந்திய குழுவினால்... Read more »