பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் குருந்தூர் ஆதிசிவன் ஆலயத்தில் பொங்கல்….!

முல்லைத்தீவு- குவிவு குமுளமுனை வீதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை குருந்தூர் மலை நோக்கி செல்லும் தமிழ் மக்கள் பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும் குருந்தூர் மலைக்கு இரவோடு இரவாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் பேருந்துகள், உழவு இயந்திரங்கள் சகிதம்... Read more »

புலனாய்வு பிரிவினர் என மக்களை அச்சுறுத்தும் இரும்பு திருடர்கள்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகவும் பொலிஸார் திருட்டுக்களை கட்டுப்படுத்த தவறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 33 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட மாங்கொல்லை பகுதியில் இருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர்... Read more »

யாழில் வீடு புகுந்து காடையர்கள் தாக்குதல், சொத்துக்களும் நாசம்…!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. கல்வியங்காடு பூதவராயர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் மீதே இன்று  அதிகாலை தாக்குதல்... Read more »

மூன்று வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி கோர விபத்து! மூவர் பலி! எட்டு பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ_9 வீதியின் பனிக்கன்குளம்  பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி இடம்பெற்ற கோர விபத்து சம்பவத்தில் மூவர் பலியானதோடு எட்டு பேர் காயமடைந்துள்ளனர் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கொழும்பு வெல்லம்பிட்டி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி... Read more »

முன்னணியின் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்…!

செஞ்சோலைப் படுகொலையின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்றுத் திங்கட்கிழமை(14.08.2023) மாலை-05.15 மணிக்கு  யாழ்ப்பாணப் பொதுநூலகத்திற்கு அருகில் உணர்வுபூர்வமாக இடம் பெற்றது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி திருமதி.வாசுகி சுதாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்... Read more »

தமிழருக்கு என்ன நடந்தாலும் சர்வதேசமும் கேட்காது, இந்தியாவும் கேட்காது….! சரவணபவன்.

தமிழருக்கு என்ன நடந்தாலும் சர்வதேசமும் கேட்காது அயல்நாடான இந்தியாவும் கேட்காது. படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் இடம்பெற்று பாதிக்கப்பட்ட தரப்புக்களின் நீதி உறுதிப்படுத்தபடவேண்டும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். செஞ்சோலை படுகொலை நினைவேந்தலினை அனுஷ்டித்த... Read more »

மட்டக்களப்பு நகர் பார்வீதி மதகின்கீழ் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பார்வீதியிலுள்ள மதகு ஒன்றின் கீழ் இருந்து அடையாளம் கானப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை (10) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் பார்வீதி உப்போடை சந்தியை அண்மித்த பகுதியிலுள்ள மதகின் கீழ் சடலம் ஒன்று இருப்பதை... Read more »

13இனை தமிழர் பிரச்சினையின் ஆரம்பப் புள்ளியாகவோ இறுதித் தீர்வாகவோ ஏற்க முடியாது – த.தே.ம.முன்னணி ஜனாதிபதிக்கு கடிதம்..!

கடந்த வாரம் 13ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கட்சிகளின் யோசனைகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கட்சித் தலைவர்களிடம் கோரப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு எழுத்து மூலம், 08-08-2023 அன்று கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,... Read more »

வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனம் நடத்திய 2வது ஆண்டு ‘ஆளுமை விருதுகள்’ வழங்கும் நிகழ்வு..!

தாயகத்தைத் தளமாகக் கொண்ட ‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனம் நடத்திய 2வது ஆண்டு ‘ஆளுமை விருதுகள்’ வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது. ‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனரும் கனடா வாழ் கவிஞருமான அனுரா வெனிஸ்லஸ்... Read more »

காரைநகர் பகுதியில் தவறான முடிவால் ஒருவர் மரணம்…!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் பகுதியில் ஆணொருவர் தவறான முடிவால் உயிர் மாய்த்துள்ளார். இந்தச் சம்பவமானது நேற்று (09) மாலை வேளை இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தூக்கில் தொங்குவதை அவதானித்த உறவினர்கள், அவரை மீட்டு காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக... Read more »