பதவி விலகுவாரா நீதி அமைச்சர்?

  அமைச்சு பதவியை துறக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழுத்தம் கொடுத்துள்ளார் – என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் , மைத்திரி அணியின் முக்கியஸ்தருமான பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். இது தொடர்பில் அவர்... Read more »

சர்வஜன அதிகாரத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் 27 ஆம் திகதி வெளியீடு

சர்வஜன அதிகாரம் எனும் அரசியல் கூட்டணியின் முதற்கட்ட தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 27 ஆம் திகதி மக்கள் மயப்படுத்தப்படும் என்று இக்கூட்டணியின் பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “... Read more »

தமிழர் தரப்பின் பலவீனம் இலங்கை இந்திய அரசுகளுக்கு சாகமாக மாறியுள்ளது – சபா குகதாஸ்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் அவர்கள் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மூன்றாவது முறை பதவி ஏற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் அயல் உறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் உத்தியோகபூர்வ முதற்... Read more »

சுமந்திரனின் துரோகிக் பட்டம் நிரந்தரமாக்கப்பட்டுள்ளது…! அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி  சி.அ.யோதிலிங்கம்.

துரோகி பட்டம் கிடைத்தாலும் பொது வேட்பாளரை எதிர்த்து பிரச்சாரம் செய்வோம் என சுமந்திரன் சூளுரைத்திருக்கின்றார். சுமந்திரனுக்கு இப்பட்டத்தை புதிதாக சூட்டத் தேவையில்லை. அவருக்கு அது ஏற்கனவே கிடைத்து விட்டது. சர்வதேச விசாரணை முடிந்து விட்டது எனக் கூறிய போதும் “ஏக்கிய ராச்சிய” சிந்தனையை முன்வைத்த... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்வோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் வாகனங்கள் தொடர்பில் விமான நிலையமும் விமானச் சேவை நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் வாகனங்கள் சாரதிகள் இன்றி விமான நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், விமானப்... Read more »

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஜூன் 9 இல் பகிரங்கக் கருத்துப் பரிமாற்றம் – சுமந்திரன்

“ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் சம்பந்தமாக எதிர்வரும் ஜூன் மாதம் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பொது வெளியில் பகிரங்கமாக ஆரோக்கியமான முறையில் கருத்துப் பரிமாற்றம் நடைபெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.” – இவ்வாறு யாழ். ஊடக... Read more »

நான்கு அமெரிக்க மாநிலங்களில் சூறாவளி: 19 பேர் உயிரிழப்பு

நான்கு அமெரிக்க மாநிலங்களில் சூறாவளி மற்றும் புயல்கள் வீசியதால் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகளை பல சேதமடைந்ததுடன் நூறாயிரக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.. ஞாயிற்றுக்கிழமை பல மாநிலங்களில் 500,000 பேர் காயமடைந்தனர். வடக்கு டெக்சாஸில் 7 பேரும், ஆர்கன்சாஸில் 8 பேரும், ஓக்லஹோமாவில்... Read more »

குடா கங்கையின் நீர்மட்டம் உயர்வு

களு கங்கையின் கிளை நதியான குடா கங்கை மில்லகந்த பிரதேசத்தில் சிறு வெள்ளப்பெருக்கு நிலையை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதாவது இன்று மாலை 6 மணியளவில் குடா கங்கையின் நீர்மட்டம் 6.53 மீற்றராக உயர்ந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இது 8 மீற்றர் மட்டத்தை... Read more »

எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மூதூர் வருகை

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 204 ஆவது கட்டமாக 12 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் ,வெருகல் – ,இலங்கைமுகத்துவாரம் இந்து கல்லூரிக்கு  வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (27) இடம்பெற்றது. இதன் போது, பாடசாலை நடன குழுவுக்கு ஒரு... Read more »

கனடா செல்ல இருந்த இளைஞன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி

யாழ்ப்பாணம் – மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கனடா செல்ல இருந்த இளைஞன் ஒருவர்  உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று  இரவு 8:00 மணியளவில் சாவகச்சேரி – புத்தூர் விதியில் இடம் பெற்றுள்ளது. அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர்  மதிலுடன்... Read more »