எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மூதூர் வருகை

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 204 ஆவது கட்டமாக 12 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் ,வெருகல் – ,இலங்கைமுகத்துவாரம் இந்து கல்லூரிக்கு  வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (27) இடம்பெற்றது.

இதன் போது, பாடசாலை நடன குழுவுக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் ,சேருவில தொகுதி இணை அமைப்பாளர் ரணசிங்க பாண்டார , பாடசாலை அதிபர், ஆசிரியர், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews