கிழக்கை மீட்போம் என கிழக்கை அழிக்கின்றவர்களை மண்ணை விட்டு அகற்ற வேண்டியது மட்டு மண்ணில் பிறந்த ஒவ்வொருவரின் கடமை — சீயோன் தேவாலய குண்டுவெடிப்பில் 3 பேரை இழந்த பாதிக்கப்பட்ட  அரசரட்ணம் வேள் வேண்டுகொள்–

கிழக்கை மீட்கவந்தோம் என கூறிக் கொண்டு கிழக்கை இன்னொரு சமூகத்துக்காக தனிப்பட்ட ஒருவரின் நன்மைக்காக துரோகங்களை இழைத்து சமூகத்தை அழிக்கின்ற இவர்களை இந்த மண்ணையும் மக்களையும் விட்டு அகற்ற வேண்டியது மட்டக்களப்பில் மண்ணில் பிறந்த ஒவ்வொருவருடைய கடமையாகும் எனவே இவர்களை  சர்வதேசத்தின் முன்  நிறுத்தி... Read more »

அரசாங்கங்கள் மாறினாலும், கொள்கைகள் நிலையானதாக இருக்கவேண்டும் – ஜனாதிபதி

இலங்கையின் வெளிவிவகாரக்கொள்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசியக்கொள்கையைத் தயாரிப்பது தொடர்பான வரைவுகளை இவ்வருட இறுதிக்குள் தயாரிக்குமாறு, உரிய அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கங்கள் மாறினாலும், கொள்கைகளை நிலையாகப்பேணுவது அவசியமானது என்றும், காலத்திற்கு காலம் மாறும் கொள்கைகளால் ஒரு நாடு... Read more »

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு விவகாரம் – சர்வதேச கண்காணிப்பின்றி அகழ்வு முன்னெடுக்கப்படுவதில் திருப்தியில்லை – ரவிகரன்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு விவகாரம், சர்வதேச கண்காணிப்பின்றி இடம்பெறுவது திருப்தி அளிக்கவில்லை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அதேவேளை இந்த அகழ்வுப் பணியில் தொல்லியல் துறையினர் மீதும் தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.... Read more »

வடமாகாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு ஐ.நா அமைப்பு தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் – ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர்

வடமாகாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிட இணைப்பாளர் திரு மார்க் அன்றூ பிரான்ச் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் அன்றாட செயற்பாடுகள்... Read more »

நாடு முழுவதும் சைவ ஆலயங்கள் மக்கள் ஆதரவுடன்தான் கட்டப்பட்டுள்ளன – கு. சுரேந்திரன்- பேச்சாளர் ரெலோ.

 25 மாவட்டங்களிலும் இந்து ஆலயங்கள் கட்டப்பட்டுள்ள பொழுது பெளத்த விகாரைகளை வடக்கு கிழக்கில் கட்டுவதற்கு எதற்கு தடை என்று கேள்வி எழுப்பி உள்ளனர் இனவாத மதவாத மும்மூர்த்திகள்.  அனைத்து மாவட்டங்களிலும் சைவ ஆலயங்கள் அங்குள்ள பக்தர்களால் மக்கள் ஆதரவுடன் உரிய அனுமதி பெற்று சட்டபூர்வமாக... Read more »

குருந்தூர் மலை தொடக்கம் கஜேந்திரக்குமாரின் வீடுவரை – ஆய்வாளர் நிலாந்தன்

கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டது போலவே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானோடு பிக்குகள் மோதத் தொடங்கி விட்டார்கள். திருகோணாமலை கச்சேரியில் நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்குள் அத்துமீறிப் புகுந்த பிக்குகள் அடங்கிய குழுவை யாராலும் தடுக்க முடியவில்லை.அங்கே போலீஸ் இருந்தது.அரச உயர்... Read more »

அரசியலில் எதற்கும் தயாராகவே இருக்கின்றேன் – மைத்திரிபால சிறிசேன

அரசியலில் நான் எதற்கும் தயாராகவே இருக்கின்றேன் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்கவும் தயார் என தெரிவித்துள்ளார். மேலும், சிறீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நாம் அனைவரும் சகோதரர்கள்போல் செயற்பட்டு வருகின்றோம். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில்... Read more »

பறிக்கப்படும் மேய்ச்சல் தரை – ஆய்வாளர் நிலாந்தன்

அண்மைக் காலங்களில் இனமுரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தும் நிலப்பறிப்பு மற்றும் சிங்களபௌத்த மயமாக்கல் நடவடிக்கைகளில், முன்னணியில் பௌத்த பிக்குகள் காணப்படுகிறார்கள்.அப்படியொரு சம்பவம் கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறத்தில் இடம்பெற்றது. அங்கே மயிலத்தமடு மாதவனையில் காணப்படும் மேய்ச்சல் தரையை ஆக்கிரமிக்க முற்படும் சிங்கள விவசாயிகளுக்குத் தலைமை தாங்கிய... Read more »

சிதறடிக்கப்படும் தமிழ் கவனக்குவிப்பு – ஆய்வாளர் நிலாந்தன்

குருந்தூர் மலை ; வெடுக்குநாறி மலை ; பறளாய் முருகன் கோயில்;தையிட்டி; திருகோணமலை,பெரியகுளம் உச்சிப்பிள்ளையார் மலை;மாதவனை மயிலைத்த மடு மேய்ச்சல் தரை;ராவணன் தமிழனா இல்லையா?மேர்வின் டி சில்வா தமிழர்களின் தலைகளைக் கொய்வாரா…..என்றிவ்வாறாக அண்மை காலங்களில் தமிழ்க்கட்சிகள்;செயற்பாட்டாளர்கள்;ஊடகங்களின் கவனம் வெவ்வேறு திசைகளில் ஈர்க்கப்படுகின்றது.கிழமைக்கு ஒன்று அல்லது... Read more »

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் போராட்டம்..!(video)

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்ட பேரணியொன்றை யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுத்தனர்.வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 30.08.2023  காலை  பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகிய இப் போராட்டம் அங்கிருந்து பேரணியாக யாழ்ப்பாண நகரைச் சுற்றி,... Read more »