முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் தம்மிக்க பெரேரா கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தம்மிக்க பெரேரா சிறீலங்கா... Read more »
ஜனாதிபதி மாளிகைக்குள் பங்கர் ஒன்று இருப்பதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மாளிகையின் ஓர் அறையில் அலுமாரி வைக்கப்பட்டுள்ளது. அந்த அலுமாறியின் கதவை திறந்தால் அதற்கு பின்னால் பதுங்குக் குழி காணப்படுகின்றது. இந்த பதுங்குக் குழிக்குள் பாரந்தூக்கியொன்றும் காணப்படுகின்றது என்று ஆர்ப்பாட்டகாரர்கள் கூறும் காணொளி வெளியாகியுள்ளது. Read more »
இலங்கை அதிகாரிகளிடம் அமெரிக்க அரசாங்கம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு நீண்டகால தீர்வுகளை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய சூழ்நிலைக்கு பாராளுமன்றம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், எந்தவொரு அரசியல் கட்சியின்... Read more »
நாட்டின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான தீர்மானமிக்க கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை முற்பகல் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. பதில் ஜனாதிபதி ஒருவரை நியமித்தல் மற்றும் சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குதல் என்பன தொடர்பில்... Read more »
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். Read more »
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி பதவியிலிருந்து விலகாவிட்டால், அறிவித்தல் இன்றி வேலைநிறுத்தம் மற்றும் முழு கடையடைப்பில் ஈடுபடப் போவதாக இன்று தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் அறிவித்துள்ளது. கொழும்பு கோட்டையிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்க காரியாலயத்தில் இன்று நடைபெற்ற தொழிற்சங்கங்கள்... Read more »
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நியாயமான விசாரணை நடத்தி பாரபட்சம் பாராமல் தண்டனை வழங்க வேண்டும். இந்த... Read more »
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வீதி, சங்கானை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து வயோதிப பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் நரம்புத்தளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்டவர் என்றும் “நான் உங்களுக்கு தொந்தரவாக இருப்பதற்கு விரும்பவில்லை” என்றும் உறவினர்களுக்கு கூறியதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட... Read more »
பிரதமரின் தனிப்பட்ட வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், தனியார் ஊடகமொன்றும் அரசியல் கட்சியொன்றும் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார குற்றஞ்சாட்டியுள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய கருத்துப் பதிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளர். போராட்டத்தை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட... Read more »
மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காது மக்கள் போராட்டத்தை கணக்கில் எடுக்காது பதுங்குக்குழிக்குள் இருந்துகொண்டு பதவியை தக்கவைத்துக்கொள்ள முயற்சித்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, நேற்றைய தினம் ஜனாதிபதி மாளிகையிலிருந்து பின்கதவால் செல்ல நேர்ந்தது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்... Read more »