சுகாதாரத் திணைக்களத்தால் குடும்ப நல உத்தியோகத்தர்களின் சேவை அத்தியவசியப்படுத்தப்படாமையினல் பிரசவ காலமரணம் பதிவு ….!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் கிராமசேவையாளர் பிரிவின் வீரமாநகர் கிராமத்திலிருந்து கதிர்காமத்துக்கு பாதயாத்திரையாகச் சென்ற 19வயதுடைய இளம் கர்ப்பவதியொருவர் நேற்றிரவு இடைநடுவே உகந்தையில்  குழந்தையைப் பிரசவித்தார் .இதன் போது சீரான வைத்தியமின்மை காரணமாக குழந்தை இறந்த துர்ப்பாக்கியம் நிகழ்ந்துள்ளது. அதிகளவான... Read more »

இலங்கை முதலுதவி சங்கத்தினரின் சேவையை பாராட்டி நயினை நாகபூசணி அம்மன் ஆலய பரிபாலன சபை கௌரவிப்பு…..!

இலங்கை முதலுதவி சங்கத்தினரின் சேவையை பாராட்டி நயினை நாகபூசணி அம்மன்  ஆலய பரிபாலன சபையினரால் இலங்கை முதலுதவி சங்க நிருவாகிகளையும் தொண்டர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு ஆலய தேர் உற்சவத்தன்று இடம் பெற்றுள்ளது. நயினை நாகபூசணி அம்மன் ஆலய திருவிழா காலங்களில் சேவை ஆற்றியமைக்காகவும், பிற... Read more »

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள எச்சரிக்கை..!

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடாளுமன்றில் இடம்பெறவிருக்கும் நிலையில் அதற்கு இடையூறு விளைவிப்பதற்கும், அரச கட்டிடங்களை ஆக்கிரமிப்பதற்கும் இனி ஒருபோதும் இடமளிக்கப்படாது. என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அதில்... Read more »

எரிபொருள் அட்டை பெறுவதற்காக பாடத பாடுபடும் வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் யாழ்.மாவட்ட ஆசிரியர்கள்!

வெளிமாவட்டத்தில் கடமையாற்றும் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் யாழ்.மாவட்டத்திலேயே எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான இலகுவான வழியை கையாளும்படி யாழ்.மாவட்டச் செயலர் எழுதிய கடிதத்தை மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஏற்கமறுத்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மேலும் தொிவித்துள்ளதாவது, தற்போது யாழ்பாணத்தில் தாங்கியுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு,... Read more »

கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார் – சமந்தா பவர்.

மக்கள் எழுச்சி காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதாக சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவரத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார். உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு நிலை குறித்துப் பேசிய பவர், வீழ்ச்சியடையும் கடைசி அரசாங்கமாக... Read more »

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சில் கடந்த வாரம் இடம்பெற்ற... Read more »

கடல் தொழிலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்களில் இருவர் மீட்பு!

தலைமன்னார் பியர் கடற்கரை பகுதியில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களில் இரு மீனவர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை 14 ஆம் திகதி தலைமன்னார் பியர் மீன்பிடி துறையில் இருந்து கண்ணாடி இழைப்படகில் மூன்று... Read more »

ரணிலின் எம்பி பதவி தொடர்பான தீர்ப்பு நாளை!

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்வதற்கு உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா? இல்லையா? என்ற தீர்ப்பு இன்று வழங்கப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுவின்... Read more »

யாழ் போதனா வைத்தியசாலை பணியாளரிடம் ஒரு மூடை நெல் கொடுத்து 6 லீற்றர் பெற்றோல் வாங்கிய மாணவி.

யாழ் மீசாலைப் பகுதியில் வசிக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் ஒரு மூடை நெல் கொடுத்து 6 லீற்றர் பெற்றோல் வாங்கி தனது மோட்டார் சைக்கிளுக்கு விட்டு உல்லாச சவாரி செய்துள்ளார். தனது நண்பியின் பிறந்த தினத்திற்காக மீசாலையில் இருந்து வட்டுக்கோட்டைக்கு... Read more »

இன்றைய இலங்கை தீவின் அரசியல், பொருளாதார நெருக்கடியை தமிழ் மக்கள் சார்பாக சரியான விதத்தில் அணுக தமிழ் தேசிய கட்சிகள் முன்வர வேண்டும்……!குரு முதல்வர் அகத்தி அடிகளார்.

இன்றைய இலங்கை தீவின் அரசியல், பொருளாதார நெருக்கடியை தமிழ் மக்கள் சார்பாக சரியான விதத்தில் அணுக தமிழ் தேசிய கட்சிகள் முன்வர வேண்டும் என தென்கயிலை குரு முதல்வர் அகத்தி அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.இன்று அவர் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு... Read more »