நாடாளுமன்றத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். உத்தேச புனர்வாழ்வுப் பணியக சட்டத்தின் அடிப்படையில் சாதாரண மக்களை போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு முன்னர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பரிசோதிக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார். புனர்வாழ்வு பணியகம் என்ற... Read more »
INSEE சங்ஸ்தா மற்றும் INSEE ப்ளஸ் 50 கிலோகிராம் சீமெந்து மூட்டைகளின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி விலையை 100 ரூபாவினால் குறைப்பதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. கட்டட நிர்மாணப் பணியாளர்களுக்கு சலுகை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த... Read more »
சுவிற்சர்லாந்து அரசியலில் இளைய தலைமுறையை சார்ந்த றூபன் சிவகனேசன் சுக் (Kanton ZUG) மாநில அரசின் தேர்தலில்(Kantonrat) 5 வது தடவையாக வெற்றிபெற்றுள்ளார். கடந்த 2ம் திகதி நடைபெற்று முடிந்த மாநில அரசிற்கான தேர்தலின் போது SP- Sozialdemokratische Partei கட்சியின் தலைமை பொறுப்புக்களும்... Read more »
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடலில் ஆண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (04.10.2022) காலை நடந்துள்ளது. கடற்தொழிலாளர்களின் வலையில் சிக்கியவாறு சடலம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் சடலம் யாருடையது என அடையாளங்காணப்படவில்லை. மேலும், கடற்தொழிலாளர்களால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கிய நிலையில்,... Read more »
யாழ். பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி இம்மாதம் நடைபெறவுள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார். பட்டமளிப்பு விழா தொடர்பில் ஊடகங்களுக்கு விபரிக்கும் வகையிலான காணொளி யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஊடகப் பிரிவினால் நேற்று வெளியிடப்பட்டது. அக் காணொளி யாழ். பல்கலைக்கழகத்... Read more »
உள்ளூர் பால்மாவின் விலையை அதிகரிக்க பால்மா உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி, 450 கிராம் உள்ளுர் பால்மா பொதி 125 ரூபாயினால் அதிகரிக்கப்படுகின்றது. இதனால், 850 ரூபாவாக இருந்த 450 கிராம் பால்மா பொதி 975 ரூபாவாக அதிகரித்துள்ளது. அத்துடன், 400 கிராம் பால் மா... Read more »
பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இளைஞரொருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். காலி – ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயரத்ன மாவத்தைப் பகுதியில் இன்று (04.10.2022) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காலியில் இருந்து அம்பலாங்கொடை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்ட இளைஞர் பலத்த காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில்... Read more »
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களனியில் இடம்பெற்றுவரும் மாணவர்களின் போராட்டத்தை கலைப்பதற்காகவே பொலிஸார் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளனர். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தொழிற்சங்கத்தினர் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள்... Read more »
கொட்டகலை-பத்தனை,போகாவத்த சிங்கள வித்தியாலய மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் (03.10.2022) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது போராட்டக்காரர்கள், போலிக் குற்றச்சாட்டுகளின் பிரகாரம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிபரை, மீண்டும் அதே பாடசாலையில் மீள பணியமர்த்துமாறு வலியுறுத்தியுள்ளனர். பாடசாலைக்கு முன்பாக தலவாக்கலை – நாவலப்பிட்டிய பிரதான வீதியில் போகாவத்தை நகரத்தில்... Read more »
ஆங்கில மொழியை கையாள முடியாமல் வெளிநாடுகளிலும், விமான நிலையங்களிலும் பல இலங்கையர்கள் அனாதரவாக இருக்கும் நேரங்களும் உண்டு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுமு் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, உலகக்கிண்ண கோப்பைக்காக... Read more »