சற்றுமுன்னர் நுவரெலியாவில் கோர விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு

நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற வேன் ஒன்றுடன் கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை சுற்றுலாவுக்கு... Read more »

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் அதனை பதிவிறக்கம் செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்... Read more »

யாழ் மாவட்ட அரசாங்க அதிபருடன் இராணுவ கட்டளை தளபதி சந்திப்பு!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களை யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட அவர்கள் மரியாதை நிமித்தமாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினாா். இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் விடுவிக்கப்படாத காணிகளின் விபரங்கள் தொடர்பாகவும் முகாம்களில்... Read more »

இந்திய வெளிவிவகார அமைச்சர், அலி சப்ரி இடையே சந்திப்பு

நாட்டிற்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்துள்ளார். இதன்போது இரு நாடுகளினதும் இராஜதந்திர உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும் உள்கட்டமைப்பு, எரிசக்தி, தொழில் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.... Read more »

தமிழரசு கட்சியின் மற்றுமொரு அணி என்றால் எமக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் – சுயேட்சைக்குழு தெரிவிப்பு

தமிழரசு கட்சியின் மற்றுமொரு அணி என்றால் எமக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் என சுயேட்சைக்குழு தெரிவித்துள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கான தமது வேட்புமனுவை சுயேட்சைக்குழு  இன்று தாக்கல் செய்தது. இன்று காலை 11 மணியளவில் குறித்த வேட்புமனுவை கையளித்தனர். இதன் போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த முன்னாள்... Read more »

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

நாடு முழுவதுமுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் பெப்ரவரி 20 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுகிறது. 2022 பாடசாலை கல்வியாண்டின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் (20) நிறைவடைகின்றது. அதேவேளை க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாவதுடன் நாடு முழுவதுமுள்ள... Read more »

தேர்தலை ஒத்திவைக்க ஜனாதிபதியும் அரசும் கடும் பிரயத்தனம்! சபையில் சஜித் குற்றச்சாட்டு

“ஜனாதிபதியும் அரசும் கூட்டுப்பிரயத்தனங்களால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (19) தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மீதான விவாதம் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், “தேர்தலை ஒத்திவைக்கும்... Read more »

தற்போதைய தேவை புதிய சிந்தனைகளே! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்….!

உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் நடாத்தப்படும் என நிச்சயமான நிலை இன்னமும் தோன்றவில்லை. அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் கொடுப்பதே அடுத்த அடுத்த மாதங்களில் கஸ்டமாக இருக்கலாம் என அரசாங்கம் கூறத் தொடங்கியுள்ளது. உயர்மட்ட அதிகாரிகளின் வேதனங்களை கட்டம் கட்டமாக வழங்குவது பற்றியும் அரசாங்க மட்டத்தில் பேசப்படுகின்றது.... Read more »

டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முழங்காவில் அன்பு புரம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கம் மற்றும் கொழும்பினை தலைமையகமாக கொண்ட ‘வினிவித பவுன்டேஷன்’ ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் கடல் வளத்திற்கும், கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக... Read more »

ஹெரோயின் பாவனையால் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

தொடர்ச்சியான ஹெரோய்ன் போதைப் பாவனைக்கு அடிமையாகியிருந்த ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். கொடிகாமம், வரணி இயற்றாலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை ராஜ்குமார் (வயது-37) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். போதைப் பொருள் குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி இவர்... Read more »