வடமராட்சி கிழக்கு மீனவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் இடம் பெறும் சட்டவிரோத  கடற்றொழில்களை  உடனடியாக கட்டுப்படுத்துமாறு கோரியே குறித்த போராட்டம் இன்று காலை 9:00 மணியளவில் வடமராட்சி கிழக்கு  பிரதேச செயலகம்  முன்பாக அமைதியான முறையில் இடம் பெற்றது.  வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட 19 கடற்றொழிலாளர் கூட்டுறவு... Read more »

மின் கட்டண உயர்வின் எதிரொலி! மற்றுமொரு விலை அதிகரிப்பு

நாட்டில் மின்கட்டண உயர்வு தொடர்பில் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்துபல விலை அதிகரிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய மின் கட்டண உயர்வால் பேக்கரி பொருட்களின் விலையையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என பல பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான பேக்கரி உற்பத்திகள் மின்சாரத்தைப் பயன்படுத்துவதால், மின்... Read more »

யாழில் நேற்றிரவு நடந்த பயங்கரம்..! துரத்தி துரத்தி வாள்வெட்டு

யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் எருபொருள் நிரப்பு நிலையத்தில் QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு (16) 11:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்வத்தில் படுகாமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.... Read more »

தாவடியில் வாகன திருத்தகத்தில் தீ விபத்து!

தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ளவாகன வேலைத்தளம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வாகன பெயிண்டிங் மற்றும் வாகன வேலைத்தளம் எரிந்து நாசமாகியுள்ளதோடு வேலைத் தளத்துக்குள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பட்டா ரக வாகனமும் முழுமையாக எரிந்துள்ளது வேலைத்தளத்தில் ஏற்பட்ட மின்ஒழுக்கு காரணமாக தீ விபத்து... Read more »

மக்கள் பயன்பாட்டிலிருந்த காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்

மக்கள் பயன்பாட்டிருந்த காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி செயலகத்தின் சமூக விவகார... Read more »

மின்கட்டண அதிகரிப்பு எதிரொலி!: கொத்து, ப்ரைட் ரைஸ் விலைகள் அதிகரிப்பு

மின்கட்டண அதிகரிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொதி, கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 10 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இதேவேளை... Read more »

மாநகர சபை அமர்வில் வைக்கோல் பட்டறை நாய் என கூறியவர் வெளியேற்றம்!

சபையில் அநாகரிகமான சொற்பிரியோகத்தை செய்த மாநகர சபை உறுப்பினர் ஒருவர் வெளியேற்றப்பட்டார்.  யாழ்ப்பாண மாநகர சபையின் அமர்வு இன்று காலை மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மாநகர சபை உறுப்பினர் பாலசுப்பிரமணியம் பத்மமுரளி வைக்கோல் பட்டறை நாய் போன்று சிலர்... Read more »

தேர்தலுக்கான 50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக தகவல்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான 50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும், அரச அச்சகத்திற்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் பட்சத்தில், நான்கு நாட்களுக்குள் தபால் வாக்குச்சீட்டு அச்சிடும் பணியை நிறைவு செய்ய முடியும் எனவும் அரச அச்சகர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். அதேவேளை,... Read more »

ஜூன் மாதம் முதல் தடை செய்யப்படவுள்ள பொருட்கள்!

நாட்டில், ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனை எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் தடைசெய்யப்படவுள்ளன. பிளாஸ்ரிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை, பயன்பாடு என்பன இதன் கீழ் தடை செய்யப்படவுள்ளன. அதனடிப்படையில், ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தி அகற்றப்படும் பிளாஸ்ரிக் பொலித்தீன், பானம்... Read more »

இம்முறை சர்வதேச வர்த்தகக் கண்காட்சியினை நடாத்த யாழ் மாநகர சபை நிபந்தனை!

எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் யாழ் மாநகர சபைக்கு வழங்க வேண்டியுள்ள நிலுவையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை நடாத்த... Read more »