கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பு!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை உயர்வைத் தவிர்க்க முடியாது என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேவைக்கு ஏற்ப விநியோகத்தை வழங்குவதில்... Read more »

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் முக்கியமான பல மருந்துகளுக்கு தட்டுப்பாடு

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 02 இலட்சம் பேர் வரையான மக்களுக்கு சேவைகளை வழங்குகின்ற வைத்தியசாலையான கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் முக்கியமான சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலை வட்டாரங்கள் இதனைத் தெரிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்... Read more »

அரசாங்கத்தின் நோக்கத்தை நீதிமன்றத்தின் ஊடாக முறியடிப்போம் -ஐ.ம.ச

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் சகலரையும் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தும் வகையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இயற்ற அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அரசாங்கத்தின் நோக்கத்தை நீதிமன்றத்தின் ஊடாக முறியடிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். உத்தேச பயங்கரவாத... Read more »

ஒரு வாரத்திற்குள் தீர்வு என்ற பொலிஸாரின் வாக்குறுதிக்கமைய வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்கங்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படது

சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி வடக்கின் 14  கடற்றொழிலாளர் சங்கங்களால் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகம், பருத்தித்துறை வீதியை  முற்றுகையிட்டு இன்றையதினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டம் காரணம் பருத்தித்துறை பிரதேச செயலக செயற்பாடுகள், பருத்தித்துறை... Read more »

சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்களால் போராட்டம்

சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி  பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு வடமராட்சி வடக்கு  மீனவர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சற்று முன்னர் ஆரம்பமாகிய குறித்த போராட்டத்தில் சுமார் 300 பேர்வரை தற்போது கலந்து கொண்டுள்ளனர். பிரதேச... Read more »

கிளிநொச்சியில் குண்டர்களால் தாக்கப்பட்ட மாணவிக்கு உரிய முறையில் சிகிச்சை வழங்கப்படவில்லை – ஆளுநருக்கு தாயார் முறைப்பாடு

அண்மையில் கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய விளையாட்டுப் போட்டியில் குண்டர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் மாணவி ஒருவர் தலையில் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த மாணவியின் தலையில் பலமாக தாக்குதல் இடம் பெற்ற நிலையில் ஆறுக்கு மேற்பட்ட தையல்கள் போடப்பட்டது. எனினும்... Read more »

வீதி ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் கடற்றொழிலாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றநிலையில் பருத்தித்துறை வீதி ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி வடக்கில் 14 கடற்றொழிலாளர் சங்கங்களால் போராட்டம்... Read more »

4 கிலோ ஹெரோயின் மீட்பு!

தலைமன்னார் மணல் மணல்மேடு கடல் பகுதியில் நேற்று (02.02.2023) நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், இலங்கை கடற்படை, 04 கிலோ (ஈரமான எடை) ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளது.  வடக்கு மத்திய கடற்படை கட்டளைத்தளபதி எஸ். எல். என். எஸ் தம்மன்ன தலைமையில் நேற்று மணல்... Read more »

உள்ளூராட்சி மன்றங்களில் தடையின்றி பொதுமக்கள் சேவையை இடம்பெற வேண்டும் – ஆளுநர் பணிப்புரை

வடக்கு மாகாணத்தில் உள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சபைகளின் ஆட்சிக் காலம் கடந்த மார்ச் 19ஆம் திகதி நிறைவுக்கு வந்த பின்னர் அவற்றை நெறிப்படுத்தும்  முயற்சிகளை வடக்கு மாகாண ஆளுநர் மேற்கொண்டு வருவதாக வடமாகாண ஆளுநர் செயலகம் விடுத்துள்ள செய்தி... Read more »

மினி சூறாவளி காரணமாக பாடசாலை உள்ளிட்ட பொதுச்சொத்துக்கள், போக்குவரத்து பாதிப்பு

கிளிநொச்சி நேற்று பிற்பகல் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக பாடசாலை உள்ளிட்ட பொதுச்சொத்துக்கள், போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. கிளிநொச்சி மகாவித்தியாலய வளாகத்தில் காணப்பட்ட முறிந்து மரங்கள் சரிந்துள்ளதுடன், பாடசாலை தற்காலிக கொட்டகைகளும் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளது. இதனால் வகுப்பறை கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளது. இதேவேளை குறித்த பாடசாலைக்கு  முன்பாகவிருந்த முதிர்ச்சியடைந்த மரம் ஒன்றின்... Read more »