நாளை போக்குவரத்து இடம்பெறாது

நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக போக்குவரத்துச் சங்கங்களும் அறிவித்துள்ளன. ஹர்த்தால் அன்று எமது சங்கப் பணியாளர்களால் போக்குவரத்துச் சேவை எதுவும் முன்னெடுக்கப்படாது. நாம் ஹர்தாலுக்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றோம்’ என்று யாழ். மாவட்ட கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் சங்கத் தலைவர் கெங்காதரன்... Read more »

வல்லரசுகளின் நலன்களுக்கான களமாக இலங்கைத் தீவின் அரசியல்? – பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

இலங்கைத் தீவில் வல்லரசுகளின் ஆதிக்கம் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் நிகழ்வதாக தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவருகிறது. அத்தகைய வல்லரசுகளுக்கிடையே இலங்கை மண்ணில் போட்டிகளும் அதிகரித்து வருகின்றது. இந்தியா,அமெரிக்கா, மற்றும் சீனாவுக்கிடையேயான ஆதிக்கப் போட்டி தவிர்க்க முடியாததென்றாக எழுச்சி பெற்றுவருகிறது. அத்தகைய அரசுகள் தமது எல்லைக்குள் செயல்பட்டாலும் ஊடகங்களும்... Read more »

நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு தமிழ் தேசிய கட்சிகள் அழைப்பு!

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்தமயமாக்கல் மற்றும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 25ஆம் திகதி நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ் தேசிய கட்சிகளினால் கூட்டாக அழைப்பு விடுக்கப்பட்டதாக... Read more »

பாடசாலை மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை செய்தவர் கைது!

ஊரெழு மற்றும் உரும்பிராய் பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து மாவா போதை பாக்கை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரிடமிருந்து 100 ரூபாய் பெறுமதியான 250 மாவா போதை பாக்கு பக்கெட்டுக்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.... Read more »

இனங்களை அடக்குவதற்காக கொண்டுவரப்படும் எந்த சட்டத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கும் நா.உ. தவராசா கலையரசன்

இந்த நாட்டிலே தமிழர்களை இல்லாது ஒழிப்பதற்காக 40 வருடத்துக்கு முன் கொண்டுவரப்பட்டது தான் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் எனவே இனங்களை அடக்குவதற்காக கொண்டுவரப்படும் எந்த சட்டமாக இருந்தாலும் அதனை முற்று முழுதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கும்  என தமிழரசு கட்சிஅ ம்பாறை மாவட்ட... Read more »

நெடுந்தீவு மக்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலம் !

மாபெரும் நெடுந்தீவு மக்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலம் இன்று(24) திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு மாவிலி துறைமுகத்திலிருந்து, நெடுந்தீவு பிரதேசசெயலகம், நெடுந்தீவு காவல் நிலையம் வரை, இடம்பெற்றது ஊர்வலத்தின் முடிவில் பிரதேசசெயலாளர், நெடுந்தீவு காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது. நெடுந்தீவு மாவிலிதுறைக்கு முன்பாக... Read more »

வடக்கில் பனை வளம் அழிக்கப்படுவதை தடுக்க விசேட வேலைத் திட்டம்! தென்னை பயிற்செய்கை சபை

வடக்கு மாகாணத்தில் பனை வளம்  அழிக்கப்படுவதை தடுக்க விசேட வேலை திட்டம் ஒன்று பனை  அபிவிருத்திசபையும் தென்னை பயிற்செய்கைசபையும் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தென்னை பயிற்செய்கைசபையின் யாழ் பிராந்திய முகாமையாளர் தே,வைகுந்தன் தெரிவித்தார். இன்று யாழில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்வட மாகாணத்தில்... Read more »

சமூக விஞ்ஞான ஆய்வு மையம் பூரண ஆதரவு….! இயக்குநர் சி.அ. யோதிலிங்கம்

தமிழர்களுடைய தொல்பொருள் சின்னங்கள், ஆலயங்கள்  அழிப்புக்கு எதிராகவும், பயங்கரவாத எதிர்பு சட்டத்திற்க்கு  எதிராகவும் எதிர்வரும் 25 ம் திகதி அதாவது நாளை மறுதினம்  இடம்பெறும்  கதவடைப்பு போராட்டத்திற்கு சமூக விஞ்ஞான ஆய்வு மையம் பூரண ஆதரவு வழங்குவதாக சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் நிறுவனரும்,... Read more »

நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்ட வர்களின் உடலங்கள் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு எடுத்து செல்லப்படுகின்றன

நெடுந்தீவில் இன்று அதிகாலை படுகொலை செய்யப்பட்ட ஐவரின் உடல்களையும் ஊர்காவற்துறை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதோடு இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாண போதனை வைத்தியசாலைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டடுள்ளார். இதன் அடிப்படையில் உயிரிழந்த ஐவரின் உடலும் கடற்படையின் விசேட படகு மூலம் யாழ்ப்பாண போதனா மருத்துவமனைக்கு... Read more »

யாழ்.வடமராட்சி கிழக்கில் மீண்டும் மணல் அகழ்வுக்கு அனுமதி!! தகவலறியும் உரிமைச் சட்டம் ஊடான கேள்வி தகவல் இருந்தும் இல்லை என பதில்……! ஊழல் என மக்கள் விசனம்

யாழ்.வடமராட்சி கிழக்கு மருங்தங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் 2023ம் ஆண்டு புதிய மணல் அகழ்வு அனுமதிகள் வழங்கப்பட்டமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. மருதங்கணி பிரதேச செயலகத்தில் கீழ் உள்ள பகுதிகளில் மணல் அகழ்வுகளை நிறுத்துமாறு அப்பகுதி மக்கள் பல்வேறு முறைபாடுகளை தெரிவித்துவரும்... Read more »