மன்னார் பாடசாலையில் மாணவனை காலால் உதைந்த போதகர் – அவசர தொலைபேசிக்கு முறைப்பாடு

கடந்த சில தினங்களுக்கு முன்னர்,மன்னார் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ பாடசாலை ஒன்றின் பதில் அதிபரான போதகர் ஒருவர் மாணவனை காலால் உதைத்த சம்பவம் தொடர்பில் வடக்கு கல்வி அமைச்சின்  அவசர தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் வட மாகாண கல்வி... Read more »

ஆவரங்கால் மேற்கு பகுதியில்போதை மாத்திரைகளுடன் 21 வயதுடைய சந்தேகநபர் கைது….!

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆவரங்கால் மேற்கு, வன்னியசிங்கம் பகுதியில் 58 போதை மாத்திரைகளுடன் 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது இன்றைய தினம், செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிசாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது... Read more »

பனை மரங்களை அனுமதிப்பத்திரம் இல்லாமல் ஏற்றிச் சென்றவர் கைது!

உழவு இயந்திரத்தில் பதினொரு பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரிடன் அனுமதிப்பத்திரங்கள் எவையும் இருக்கவில்லை. இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் பனை மரங்கள் அழிக்கப்படுவதாக காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிசாருக்கு... Read more »

உடுவில் பாடசாலை விவகாரம் –  மாணவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…!

உடுவில் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆண் ஆசிரியர் ஒருவரால் மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் சுரண்டல் தொடர்பில் பாடசாலையை விட்டு வெளியேற்றப்பட்ட மாணவி  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதாவது குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆன் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியான கருத்துக்களை... Read more »

தொடருந்தில் மோதுண்டு ஒருவர் படுகாயம்

கொழும்பு – திருகோணமலை பயணித்த தொடருந்தில் மோதுண்டு ஒருவர் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (25.04.2023)இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வீதியை கடக்க முற்பட்ட போதே தொடருந்தில் மோதுண்டு குறித்த நபர் விபத்துக்குள்ளாகியுள்ளார். கந்தளாய் பகுதியை... Read more »

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு: ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு அழைப்பு!

பொதுமக்கள் அமைதியை பேணுவதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினரையும் கடமைக்கு அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். பாராளுமன்றம் இன்று ஆரம்பமான போது பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இதனை அறிவித்தார். பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு... Read more »

எரிபொருள் கோட்டா குறித்து வெளியான அறிவிப்பு!

பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரையில் மாற்றம் இல்லாமல் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கடந்த வாரம் வரை எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதுடன், பின்னர் மேலும் ஒரு வாரத்துக்கு... Read more »

யாழ். நெடுந்தீவு ஐவர் படுகொலை வழக்கு: சந்தேகநபர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்து, 100 வயதான மூதாட்டிக்கு கடும் காயங்களை ஏற்படுத்தி, நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைதான நபரை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே. கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை... Read more »

உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய ஆசிரியர்கள் தயார்: இலங்கை ஆசிரியர் சங்கம்

உயர்தர பரீட்சை விடைத்தாள்களை  மதிப்பீடு செய்வதற்கு இதுவரை 12,000 ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கமைய உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை எந்த நேரத்திலும் மதிப்பீடு செய்வதற்கு ஆசிரியர்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள்... Read more »

கொழும்பில் பலப்படுத்தப்படும் சுற்றுலா விடுதிகளின் பாதுகாப்பு!

கொழும்பு சுற்றுலா விடுதிகள் மற்றும் அவற்றுக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க விடுதிகளின் பாதுகாப்பு பிரதானிகளுக்கு அறிவித்துள்ளார். அத்துடன், எதிர்காலத்தில் சுற்றுலா விடுதிகளில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை மேற்கொள்ளுமாறும் அவர் ஆலோசனை... Read more »