ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வர ஆதீனகர்த்தா ராஜராஜஶ்ரீ கு. நகுலேஸ்வரக்குருக்கள் இறையடி சேர்ந்தார். 

ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வர ஆதீனகர்த்தா ராஜராஜஶ்ரீ கு. நகுலேஸ்வரக்குருக்கள் (வயது 98)  நேற்று சனிக்கிழமை  இறையடி சேர்ந்தார். அன்னாரது இறுதி யாத்திரை இன்று 16.7.2023 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணியளவில் நகுலேஸ்வரத்திலிருந்து ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

குடும்பத்தினரை கட்டி வைத்து பெறுமதியான உடைமைகள் கொள்ளை

சீதுவ, பிரதேசத்தில் வயோதிப தம்பதி மற்றும் அவர்களது மகளைக் கட்டிவைத்து பெறுமதியான உடைமைகள் அடையாளம் தெரியாத சிலரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சீதுவை,லியனகேமுல்லை பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தொகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயோதிபத் தம்பதி மற்றும் மகளை துணியால் கட்டி, தங்கம் மற்றும் சொத்துக்களை... Read more »

மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய மீனினம் தெற்கில்!

கிழக்கு கடற்கரையில் இருந்த ‘லோடியா’ என்ற மீன் இனம் தெற்கு கடற்கரையிலும் பரவியுள்ளதாக தேசிய விஷ தகவல் மையம் அறிவித்துள்ளது. இந்த உயிரினம் மனித உடலில் உரசினால் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாக அதன் பிரதானி வைத்திய நிபுணர் கலாநிதி ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.... Read more »

உர மூட்டை விலை 1000 ரூபாவால் குறைப்பு

MOP 50 கிலோ கிராம் உர மூட்டை ஒன்று இன்று முதல் 1000 ரூபாவால் குறைக்கப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முதலில் 15000 ரூபாவிற்கு விற்பனையாகிய உர மூட்டை, விலை குறைப்பிற்கு அமைய இன்று முதல் 14 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனைசெய்யப்படவுள்ளதாக... Read more »

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரால் சஞ்சய வனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் இன்று முதல் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

பளை இத்தாவில் பகுதியில் விபத்து – ஒருவர் பலி

பளை இத்தாவில் பகுதியில் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த வான் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.   விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த... Read more »

யாழில் விமரிசையாக இடம்பெற்ற இரு நூல்களின் வெளியீட்டுவிழா

மறைந்த பிரபல எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகனின் ஓர் இலக்கியக்காரனின் வாழ்வனுபவங்கள் மற்றும் அவரது பாரியார் ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி.புனிதவதி சண்முகனின் ஆனந்தக் கூத்து நாட்டிய நாடகத் தொகுப்பு ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை (14.07.2023) மாலை-03.30 மணியளவில் யாழ்ப்பாணம் நாச்சிமார்... Read more »

வடமாகாண பனைஅபிவிருத்தி வாரம் மாகாணசபையின் ஏற்பாடு கைவிடவோ மாற்றியமைக்கவோ திணைக்களத்துக்கு அதிகாரமில்லை – பொ.ஐங்கரநேசன் கண்டனம்

வடக்கு மாகாணக் கூட்டுறவு அமைச்சு கூட்டுறவுத் திணைக்களத்தையும் பனை , தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கங்களையும் , பனை அபிவிருத்திச் சபையையும் இணைத்து ஆண்டுதோறும் யூலை 22 தொடங்கி 28 வரையான ஒரு வார காலப்பகுதியை வடமாகாண பனைஅபிவிருத்தி வாரமாக 2015 ஆம் ஆண்டிலிருந்து மிகச்சிறப்பாகக்... Read more »

குருந்தூர் மலையில் பொங்கலுக்கு மூட்டிய தீயை சப்பாத்து காலால் அணைத்த பொலிஸ் அதிகாரி – அனைவரும் ஒன்றுபட்டு மீட்க வேண்டும் என்கிறார் சித்தார்த்தன் எம்.பி

குருந்தூர் மலையில் இன்றைய தினம் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவு அளித்திருந்த நிலையிலும் கூட இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் பொலிசார், பிக்கு ஒருவர் ஆகியோர் பொங்கல் செய்யும் இடத்திற்கு வந்து நிகழ்வினை குழப்புகின்றார்கள். ஒருவர் இதற்கென்று விளம்பரங்கள் கொடுத்து சிங்கள மக்களை... Read more »

கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற வேண்டும் – அனந்தி வலியுறுத்து

கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி அகழ்வானது, சர்வதேசத்தின் கண்காணிப்பிலும் மற்றும் அவர்களின் மேற்பார்வையிலும்  மேற்கொள்ளப்பட  வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் அவரது இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு... Read more »