சர்வதேச நீர் வழங்கல் தினமான மார்ச் 22 தினத்தை முன்னிட்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வட பிராந்திய ஊழியர் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட அலுவலங்களின் ஊழியர்கள் இன்று(23) இரத்த தானம் வழங்கியுள்ளனர்.... Read more »
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராலை பகுதியில் வீடொன்றில் மின்னல் தாக்கியுள்ளது. குறித்த சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளது. இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்த வேளை வீட்டில் இருந்த அனைவரும் அவர்களது வீட்டின் முன் ஹோலில் இருந்துள்ளனர். இதன்போது பாரிய சத்தத்துடன்... Read more »
உக்ரைன் மீது போரிட்டு வரும் ரஷ்யாவை குவாட் நாடுகள் எதிர்க்கும் நிலையில் இந்தியாவோ நடுங்குகிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 26 நாட்களுக்கு மேலாக போரிட்டு வருகிறது. இந்த போரை நிறுத்துமாறு ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா, ஆஸ்திரேலியா,... Read more »
நாட்டில் எரிவாயு சிலிண்டருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், எரிவாயு சிலிண்டர் கொள்வனவுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்கின்றனர். மேலும் சமையல் எரிவாயு கொள்கலனுக்காக காத்திருந்த சிலர் சமையல் எரிவாயு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி வரும் சம்பவங்களும் தினமும் பதிவாயி வண்ணம் உள்ளது.... Read more »
பாகிஸ்தான் சிந்து மாகாணம் ரோகி நகரில் 18 வயதான இந்து பெண் ஒருவர் நடுவீதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அந்த பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,... Read more »
நான்கு சக்தி வாய்ந்த சகோதரர்கள் இலங்கையை எவ்வாறு நெருக்கடிக்குள் தள்ளினார்கள் என்பது குறித்து உலகப் புகழ்பெற்ற ‘ப்ளூம்பெர்க்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடித்துள்ள நெருக்கடிக்கு மத்தியில் முதல் குடும்பம் இலங்கையை ஆட்சி செய்து... Read more »
ஞானசார தேரர் தலைமையிலான “ஒரே நாடு ஒரே சட்டம்” ஆணைக்குழு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ஆளும் கட்சியின் நீதியமைச்சரும், வெளியுறவு அமைச்சரும் எவ்வித பதில்களையும் வழங்கமுடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டனர். குறிப்பாக, பயங்கரவாத தடைச்சட்ட திருத்தத்தை முன்வைத்த அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், விவாதங்களின் பின்னர்,... Read more »
நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவத்தினரை பணியில் ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் நாட்களிலும் இந்த வரிசைகள் தொடரும் என்பதை நிரூபிக்கும் வகையில் அந்த உத்தரவு உள்ளதென ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து பெறப்படும் கடனில் எரிபொருள் பிரச்சினைக்கு... Read more »
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 27-வது நாளை எட்டியுள்ள நிலையில், மரியு போல் நகரில் இருந்து உக்ரைன் இராணுவத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ரஷ்யா கெடு விதித்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் தீவிரமாக செயற்பட்டு வரும் நிலையில், போரில் தொடர்ந்து வேகமாக முன்னேற... Read more »
வடமாகாண கல்வி அமைச்சு அலுவலகத்தை முற்றுகையிட்டு வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் கதவடைப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். நேற்று அதிகாலையில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டராசிரியர்கள் காலையில் அலுவலகத்திற்கு வருகை வந்த உத்தியோகத்தர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து பொலிசாரின் தலையீட்டினால் அவர்கள் உள்ளே செல்ல... Read more »