12 மணி நேரத்திற்கு மேல் மின் வெட்டு ஏற்படும் நிலை….! பொது பயன்பாட்டு ஆணைக்குழு.

மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி மற்றும் நீருக்கு தட்டுப்பாடு நிலவுவதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டும் போதிய நிலக்கரி மற்றும் நீர் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் 12 முதல் 13 மணி நேரம் வரை மின்வெட்டு அதிகரிக்கும் எனவும் ஜானக ரத்நாயக்க எச்சரித்துள்ளார். அத்துடன்,... Read more »

இறக்குமதிக்கு தடை, மக்களுக்கு பாரிய பாதிப்பு…! புழுது ஜயகொட.

300 வகையான பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கும் அரசின் நடவடிக்கை, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த இறக்குமதி தடையால் பல துறைகளில் இலட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட... Read more »

நீர் கட்டணம் அதிகரிப்பு – வெளியானது அதிவிசேட வர்த்தமானி

நாட்டில் வடிகால் அமைப்புக்குரிய நீர் பாவனைக்கான கட்டணங்கள் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, மின் பாவனைக்கான கட்டணங்களும் கடந்த வாரத்தில் அதிகரிக்கப்பட்டிருந்தது.... Read more »

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களில் முன்னேற்றமில்லை – ரணில் கடும் பிரயத்தனம்

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களில் முன்னேற்றங்கள் எவையும் ஏற்படாத நிலையில், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் மீண்டும் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். இதன்போது சிறிலங்கா அரசாங்கத்தின் மின் கட்டண திருத்தம், மதுவரிச் சட்டம் போன்றவற்றின் சீர்திருத்த முன்மொழிவுகளைக் கோரியுள்ள நாணய நிதியம் எதிர்வரும்... Read more »

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு: பலர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட அழிவுகளையடுத்து, அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் கடந்த ஜூன் முதல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 937 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களால் 343 பேர் சிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்... Read more »

இலங்கையில் வசிக்கும் இந்திய பிரஜைகளுக்கான எச்சரிக்கை

இலங்கையில் வசிக்கும் தமது பிரஜைகளை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ ருவிட்டர் பதிவிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை உட்பட இந்தியாவிற்கு வெளியில் தங்கியிருக்கும் இந்தியப் பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு எப்போதும் முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்தது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.... Read more »

விமானத்தில் அறிமுகமான ஆணிடம் மகனை கொடுத்து விட்டு தப்பிச் சென்ற பெண்

சவுதியில் இருந்து வந்த விமானத்தில் அறிமுகமான பெண்ணொருவர் தனது இரண்டு வயதான மகனை பார்த்துக்கொள்ளுமாறு கூறி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று களுத்துறையில் நடந்துள்ளது. இது தொடர்பாக களுத்துறை தெற்கு போதியவத்தை பிரதேசத்தை சேர்ந்த எஸ்.சாந்த அப்புஹாமி என்பவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை... Read more »

குளவிக் கொட்டுக்கு இலக்கான 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

புத்தளம் சாஹிரா தேசியப் பாடசாலையில் கல்வி கற்கும் 17 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 15 வயதுக்குட்பட்ட 8 மாணவர்களும் 15 வயதுக்கு மேற்பட்ட 9 மாணவர்களும்... Read more »

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பு! கையெழுத்திட்டார் ஜனாதிபதி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பை வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்டுள்ளார். இந்த விடயத்தை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பொது மன்னிப்பு கடிதத்தில் ஜனாதிபதி செயலாளர் கையெழுத்திட்டுள்ளார். ஜனாதிபதி... Read more »

யாழில் உந்துருளியில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் காரைநகர் பொன்னாலை பாலத்தில் உந்துருளியில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கணவருடன் சென்ற குறித்த பெண் உந்துருளியின் பின்னால் இருந்து பயணித்த வேளை காரைநகர் பாலத்தடியில் அவர்திடீரென தவறிவிழுந்து தலை... Read more »