இலங்கை சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், தங்க விலையில் அதிகரிப்பு காணப்படுவதாக இன்றைய தங்க நிலவரம் மூலம் தெரிய வருகிறது. அதனடிப்படையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூபாய் 635,688.00 என பதிவாகியுள்ளது. மேலும் 24 கரட் 1... Read more »
‘ஆசியாவின் ராணி’ என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய இயற்கை மாணிக்கக் கல் இலங்கையின் ஹொரணை, தல்கஹவில பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்லின் எடை 310 கிலோ கிராம். உலகில் மிகப் பெரிய மாணிக்கக் கல்லானது இது Blue Sapphire ரகத்தை சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும்... Read more »
திருகோணமலை -மூதூர் பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2310 லீட்டர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது. இந்த மீட்பு நடவடிக்கை நேற்று(26) திருகோணமலை பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மூதூர் பல்நோக்கு கூட்டுறவு சங்க களஞ்சியசாலையில் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.... Read more »
மட்டக்களப்பு- ஏறாவூரில் கடந்த மே 9 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை செப்டம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏறாவூர் வன்முறைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்டு... Read more »
சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் அடக்குமுறைகள் மற்றும் கைதுகள் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, ரஞ்சன் ராமநாயக்க பதிலளிக்க மறுதளித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சிறிலங்கா அதிபரின் பொது மன்னிப்பில் விடுதலையான பின்னர் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,... Read more »
ஜனாதிபதி மாளிகை தனியார் சொத்தல்ல. இலங்கை மக்களின் அடையாளம். வீடியோ காட்சிகளை காண்பித்து இரகசிய இடங்களையும் உலகிற்கு பகிரங்கப்படுத்தப்பட்டது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறினார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,... Read more »
இலங்கையில் ஏற்பட்டுள்ள டீசல் பிரச்சினையை தீர்ப்பதற்கு கட்டாருடன் சாதகமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது டீசல் தட்டுப்பாடு நிலவி வருவதால், பெட்ரோல் நிரப்பு நிலையங்களுக்கு அருகே மீண்டும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. இந்நிலையில் நேற்று 50 சதவீத பேருந்துகளே... Read more »
வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமானறு செல்வச் சந்நிதியான் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று 27.08.2022 பிற்பகல் 2.30 மணியளவில் கொடியேற்றத்துடன் மிக மிக சிறப்பாக இடம்பெறவுள்ளது. அதனைந் தொடர்ந்து பேரூந்தை திருவிழாவின் போது புரட்டாதி 5ம் திகதி காலை 9 மணிக்கு பூங்காவனமும், புரட்டாதி 6ம்... Read more »
தனது ஒன்பது வயது மகளை கொடூரமாக சித்திரவதை செய்ததாக கூறப்படும் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாயினால் சித்திரவதைக்கு உள்ளான மகள், கைகால்களில் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவர் பாதுகாப்பு... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நேற்று பிற்பகல் 6:00 மணியளவில் மூன்று கடற்றொழில் வாடிகள் தீக்கிரையாகியுள்ளது. குறித்த வாடிகள் தீயில் எரிவதை பார்த்த மீனவர்கள் அதை அணைக்க முற்பட்ட முயற்சியும் தோல்வியடைந்த நிலையில் மூன்று வாடிகளும் முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. சிறு... Read more »