இலங்கையில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் ஆயிரம் ரூபாய் மதிப்பு 200 ரூபாயாக குறைந்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியின் ஊடாக பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். நாட்டில் நாளுக்கு... Read more »
யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் தொலைபேசிகளை அபகரிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரிடமிருந்து 9 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு நேற்று(22.10.2022) கைது செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி, நீர்வேலி, சுன்னாகம்,... Read more »
பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களால் வரி சுமக்கப்படுகிறது, எனவே வரி தொடர்பில் முடிவெடுக்கும் செயல்பாட்டில் அவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம் என்று கலாநிதி சாந்தயணன் தேவராஜன் தெரிவித்துள்ளார். வரிக் கொள்கைகளை பொதுமக்களால் புரிந்துகொள்ள முடியாத சிக்கலான விஷயமாகக் கருதுவதை அரசாங்கம் அகற்ற வேண்டும் என்றும்... Read more »
எரிசக்தி துறையின் சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு தயாரித்த அறிக்கை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையிடம் கையளிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நவம்பர் மாதத்துக்குள் சீர்திருத்தங்கள் சமர்ப்பிக்க எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். தமது... Read more »
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்கவை நியமிக்க அந்த கட்சியின் முகாமைத்துவ சபை தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி தலைவரான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சியின் முகாமைத்துவ சபைக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தேசிய... Read more »
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை வலுவடைந்து உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாழமுக்க நிலை நாளைய தினம் இந்திய கடல் பிராந்தியங்களில் மேலும் வலுவடையும் சாத்தியம் உள்ளதாகவும் அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாழமுக்கம் எதிர்வரும் 24... Read more »
22வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் ராஜபக்ச குடும்பத்திற்குள் பாரிய மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பலர் பொதுஜன பெரமுனவுக்குத் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு... Read more »
இந்த ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்கு ஈரானுக்கு தடை விதிக்க வேண்டும் என சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானிய கால்பந்து மற்றும் விளையாட்டு பிரமுகர்கள் குழுவே இந்த கோரிக்கையை ஃபிஃபாவிடம் முன்வைத்துள்ளது. பரவலான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு... Read more »
நாடாளுமன்ற விவாதங்களை பார்ப்பதற்கு பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக்கூட்டங்கள் நடக்கும் தினங்களில் நாடாளுமன்றத்தை பார்வையிடவும் விவாதங்களை பார்வையிடவும் பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான தெரிவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது என நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற படைக்கல சேவிதர்... Read more »
தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினரை தீபாவளி தினத்தன்று விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றமை மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“கட்டம் கட்டமாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச... Read more »