பொலிஸார் எனக்கூறி இளைஞனிடம் சங்கிலி பறிப்பு

பொலிஸார் எனக்கூறி 18 வயதான இளைஞனை கடத்திச் சென்று அவரிடம் இருந்த மூன்று லட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு சென்ற நபர்கள் குறித்து அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று முன்தினம் அவிசாவளை வைத்தியசாலைக்கு அருகில் வீதியில் நின்றுக்கொண்டிருந்த இளைஞனிடம்... Read more »

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை! சுமந்திரன் எம் பி

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு பதில் வழங்கினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »

மட்டு அம்பாறையில் பல வீடு உடைத்து கொள்ளையிட்டு வந்த பாதால கோஸ்டியைசச் சேர்ந்த குணா.பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைதுப்பாகி கைக்குண்டுடன் கைது

அக்கரைப்பற்றில் நீதவான் வீட்டு மற்றும் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசங்களில் பல வீடுகளை நீண்டகாலமாக உடைத்து கொள்ளையிட்டு வந்த குணாகுழு என்ற பெயரில் இயங்கிவந்த குணா என அழைக்கப்படும் பிரபல பாதாள கோஸ்டியைச் சோந்த பிரதான சூத்திரதாரியான குணசீலன், பெண் ஒருவர் உட்பட 4 பேரை... Read more »

அரச ஊழியர்களின் சம்பளத்தை இரண்டு கட்டமாக வழங்க முடிவு

அரச நிறுவனங்களில் நிறைவேற்று தர அதிகாரிகள் மற்றும் சாதாரண அதிகாரிகளின் சம்பளத்தை மாதத்தில் இரண்டு வெவ்வேறு தினங்களில் இரண்டு கட்டமாக வழங்க திறைசேரி தீர்மானித்துள்ளது. நாட்டின் நிதி நெருக்கடியை கவனத்தில் கொண்டு திறைசேரி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. இதற்காக நிறைவேற்று தர அதிகாரிகள்... Read more »

புதிய தேசிய பாதுகாப்பு சட்டமூலம் அடுத்தவாரம் அமைச்சரவைக்கு!

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய தேசிய பாதுகாப்புச் சட்டமூலம் கொண்டுவரப்படும் என்று நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார். புதிய சட்டமூலத்தை அடுத்த வாரத்திற்குள் அமைச்சரவையில் முன்வைக்கும் நோக்கில் அமைச்சரவை செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.... Read more »

யாழ் மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

யாழ் மாவட்டத்தில் இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் 255 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் இரண்டு வாரங்களில் 4 ஆயிரத்து 178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன்,... Read more »

நேபாளத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 68 பேர் உயிரிழப்பு

யெடி விமான சேவைக்கு சொந்தமான விமானம் நேபாளம் பொகாரா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க முற்படும்போது தீப்பற்றி அனர்த்தத்திற்கு உள்ளாகியதில் 68 விமானப் பயணிகள் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் 68 விமானப் பயணிகளும் நான்கு பணியாளர்களும் விமானத்தில் பயணித்ததாகவும் அவர்களில்... Read more »

மின் கட்டண அதிகரிப்பு – விரைவில் வரவுள்ள அறிவிப்பு

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பாக மின்சார சபை சமர்ப்பித்துள்ள யோசனைகள் தொடர்பில் தமது ஆணைக்குழுவின் தீர்மானத்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அதன் தலைவர்... Read more »

நீர்க் கட்டணங்களை செலுத்த புதிய முறைமை அறிமுகம்!

புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை வழங்குவதற்கும், செலுத்துவதற்குமான வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நாளை யாழ்.மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, குறித்த சபையின் பொது முகாமையாளர் பியால் பத்மநாத குறிப்பிட்டுள்ளார். வாடிக்கையாளர்களுக்கு நீர் கட்டண சீட்டு... Read more »

விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்தில் கட்சி ஆதரவாளர்களை சந்தித்தார் ரணில்!

யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற தேசிய பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமானவிஜயகலா மகேஸ்வரனின் இல்லத்திற்கும் விஜயம் செய்திருந்தார், கந்தர்மடம் பலாலி வீதியில்... Read more »