யாழ்.கொடிகாமம் பகுதியில் முச்சக்கர வண்டியும் – குளிரூட்டி வாகனமும் மோதி விபத்தக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து சம்பவம் கொடிகாமம் – இராமாவில் பகுதியில் நேற்று நண்பகல் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டியை சேர்ந்த எஸ்.யுகிந்தன்... Read more »
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ யாழ்.மட்டுவில் பகுதிக்கு விஜயம் செய்திருந்தபோது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் இணைந்து எதிர்ப்பு போராட்டம் நடத்தியமைக்காக வலி, கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளர் செல்வரட்ணம் மயூரன் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.... Read more »
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அருகே உள்ள இந்திய கடல் பகுதியான 4ஆம் மணல் திட்டில் இலங்கை தமிழர்கள் 6 (1 ஆண் , 2 பெண்கள் 3, குழந்தைகள்) பேரை இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இந்திய கடலோர காவல் படையினர்... Read more »
தமக்கான நிரந்தர நியமனத்தைகோரி வடமாகாண கல்வி அமைச்சு அலுவலகம் இன்று முடக்கப்படும் என தொண்டர் ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் சங்கம் தமக்கான நிரந்தர நியமனத்தைக்கோரி இன்றைய தினம் மாகாண கல்வி அமைச்சு அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்த போராட்டத்தை நடாத்துவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. Read more »
பொங்கலுக்கு தீர்வு..!தீபாவளிக்கு தீர்வு..! என சம்பந்தன் தமிழ் மக்களை ஏமாற்றியதுபோல மீண்டும் அரசுடன் பேசப்போகிறோம் என கூறுவதை நம்புவதற்கு தமிழ் மக்களை முட்டாள்கள் என எண்ணம் வேண்டாம். மேற்கண்டவாறு வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் திருமதி லீலாவதி கூறியுள்ளார். யாழ் ஊடக... Read more »
மூலப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலையேற்றம், வெற்றுப் போத்தல்களின் தட்டுப்பாடு காரணமாக போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தை இலங்கை தண்ணீர் போத்தல் விற்பனையாளர்கள் சங்கம் எடுத்திருக்கின்றது. அதற்கமைய, ஒன்றரை லீட்டர் தண்ணீர் போத்தலொன்றின் விலையை 120 ரூபா... Read more »
டுபாயில் இருந்து இலங்கைக்கு தங்கத்தை கடத்திவந்து அதனை யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவுக்கு கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை மேற்பார்வை செய்யும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. திலகரத்னவின் கட்டுப்பாட்டில் இயங்கும் மனிதக் கடத்தல்... Read more »
எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேயின் வாகன சாரதி இனந்தொியாத நபர்களால் குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். பிலியந்தலை – கெஸ்பாவயிலுள்ள வீட்டில் வைத்து நேற்றிரவு 8 மணியளவில் இன்தொியாத குழு ஒன்று தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. சம்பவத்தில் எபசிங்ககே கனிஷ்க (வயது43) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம்... Read more »
நாடு முழுவதும் சுழற்சி முறையில் இன்றைய தினமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்துள்ளது. இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L முதலான வலயங்களில் 5 மணித்தியாலங்கள் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது. அத்துடன், P, Q, R, S, T, U, V, W முதலான வலயங்களில்... Read more »
கிளிநொச்சி நகரில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணிகளுடன் பயணித்த அரச பேருந்துடன், அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டி பின் பகுதியில் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேருந்து தரிப்பிடத்தில் தரிக்க முற்பட்டபொழுது... Read more »