சம்பந்தன் இப்போது இறக்கவில்லை,  அவர் எப்போதோ  இறந்துவிட்டார்…..! அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்.

உண்மையில் சம்பந்தன் இப்போது இறக்கவில்லை,  அவர் எப்போதோ  இறந்துவிட்டார் என அரசியல் ஆய்வாளரும்,  சட்டத்தரணியிமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சி நீதிமன்றம்ப் படி ஏறியபோதே அவர் இறந்துவிட்டார். அவர் தோல்வியடைந்த தலைவராக இறக்க நேரிட்டது தான் மாபெரும் சோகம், அவர் தென்னிலங்கையுடன் இணக்க  அரசியலில்... Read more »

சம்பந்தனின் இறுதி நிகழ்வு நாளை…!

மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு இன்றும்(06)பொதுமக்கள் மக்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர். அன்னாரின் பூதவுடல் திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றையதினம் முதல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை (07)... Read more »

ஈரானில் மசூத் பெசெஸ்கியன் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி!

ஈரான் ஜனாதிபதியாக இருந்த இப்ராஹிம் ரைசி கடந்த மாதம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 28 ஆம் திகதி நடைபெற்றது. ஆனால், அன்றைய தினம் வெறும் 40 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. பதிவானவற்றில்... Read more »

புதுடெல்லிக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸிற்கு அழைப்பு

 புதுடெல்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெயசங்கரினால் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  தடைப்பட்டிருக்கின்ற இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுக்களை மீண்டும் முன்னெடுத்து, இந்தியக் கடற்றொழிலாளர்கள் விவகாரத்தினை தீர்ப்பதற்கும்  இந்திய வெளியுறவு அமைச்சர் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் தெரிவித்தார். யாழ்ப்பாணம்... Read more »

நடந்து முடிந்த பிரித்தானிய பொதுத்தேர்தலில் எதிா்க்கட்சித் தலைவா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிற் கட்சி மகத்தான வெற்றி

நடந்து முடிந்த பிரித்தானிய பொதுத்தேர்தலில் எதிா்க்கட்சித் தலைவா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிற் கட்சி மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்தவகையில், பிரித்தானியாவில் புதிய அரசை தோ்வு செய்யும் இத்தோ்தலில், உள்ளூா் நேரப்படி நேற்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி... Read more »

திருமலையை வந்தடைந்த சம்பந்தனின் பூதவுடல்…!

மறைந்த  இலங்கை தமிழ் அரசு கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு இன்று காலை விமானம் மூலமாக கொண்டுவரப்பட்டது. தமிழ் அரசு கட்சியின் திருக்கோணமலை மாவட்ட கிளைத் தலைவர், கதிரவேலு  சண்முகம் குகதாசன், இரா.சம்பந்தனின் மகன் சஞ்சீவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்... Read more »

🔴பிரித்தானிய வரலாற்று முதல் ஈழத் தமிழ் M.P

பிரித்தானியா தேர்தலில் லேபர் கட்சி சார்பாக போட்டியிட்ட உமா குமாரன் அவர்கள், 19,145 வாக்குகளை பெற்று பெரும் வெற்றியடைந்துள்ளார். இவர் ஈழத் தமிழ் பெண் என்பது உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விடையம். பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் MP உமா குமரன் ஆவார்.அதுவும்... Read more »

சம்பந்தனின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்வதற்காக இலங்கை வரும் தமிழ் நாட்டு தலைவர்கள்

பெருந்தலைவர் சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் ஜூலை 7 திருகோணமலையில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் அதில் கலந்து கொள்ளவுள்ளார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவர் அண்ணாமலை இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்வார் என்று உறுதிப்படுத்தப்பட்டதாக... Read more »

கெஹெலியவின் மனைவி, மகள்களின் வங்கி கணக்குகள் முடக்கம்..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் மகள்களின் ஒன்பது கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 16 நிலையான வைப்புக்கணக்குகள் மற்றும் மூன்று ஆயுள் காப்புறுதிப்பத்திரங்களை முடக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் காரணமாக தனியார் வங்கியொன்றின் கணக்குகள்... Read more »

ஜனாதிபதி தேர்தலை நடாத்த இது உகந்த நேரம் அல்ல…!

ஜனாதிபதி தேர்தலை பிற்போட வேண்டும் என்பதே எனது கருத்து என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய அரசாங்கம் அமைப்பது நாட்டுக்கு நல்லது. ஆனால் தமிழ்க் கட்சிகள் தேசிய அரசாங்கத்தில்... Read more »