கண்டியில் காணாமல்போனதாக கூறப்பட்ட 14 வயதான சிறுமி யாழ்.பேருந்து நிலையத்திலிருந்து மீட்கப்பட்டு பொலிஸாரினால் கண்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றார். கடந்த 11ம் திகதி குறித்த சிறுமியை யாழ்.நகரில் உள்ள வர்த்தகர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மீட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,... Read more »
யாழ்.கொடிகாமம் – கொயிலாமனை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த முதியவர் மீது கார் மோதியதில் குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. உயிரிழந்தவர் தொடர்பில் அடையாளம் காண உதவுமாறும் தெரிந்தவர்கள் 0262050222... Read more »
யாழ்.கோண்டாவில் பகுதியல் உள்ள மருத்துவர் ஒருவருடைய வீடு உடைக்கப்பட்டு 8 பவுண் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் பிற்பகல் இடம்பெற்றிருக்கின்றது. கோண்டாவில் – இராசமாணிக்கம் மண்டபத்திற்கு முன்பாக உள்ள வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை வைத்தியசாலையில் கடமையாற்றும்... Read more »
சட்டவிரோதமாக படகுகள் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பொதுமக்களிடம் பணம் கறக்கும் கும்பல் தொடர்பான பல தகவல்களை பாதுகாப்பு தரப்பினர் அம்பலப்படுத்தியிருக்கின்றனர். கடந்த சில நாட்களாக இலங்கையர்கள் சிலர் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் கடற்படை... Read more »
யாழ்ப்பாணம் – சர்வதேச விமான நிலையம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு விசேட பணிப்புரை ஒன்றை வழங்கியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, அடுத்த 6 மாதங்களுக்கு இந்தியாவில் இருந்து சுற்றுலாப்... Read more »
இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைவதையொட்டி, கடலுக்குச் செல்ல ராமேஸ்வரம் மீனவர்கள் தயாராகி வருகின்றனர். மீன் பிடி தடை காலத்தின் போது கிடப்பில் போடப்பட்ட இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தை நடைபெறும் என மீனவர்கள் எதிபார்த்து இருந்த நிலையில் பேச்சுவாhத்தை நடைபெறாததால் மீனவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.... Read more »
வடக்கு கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அதிபர் இடமாற்றத்தில் சிலரை வெளி மாவட்டம் செல்லாது பாதுகாக்க கல்வி அமைச்சின் செயலாளர் எடுத்த முடிவே ஏனைய அதிபர்கள் கடமைகளைப் பொறுப்பேற்க செல்லாமைக்கான காரணம் என தமக்கு முறைப்பாடு கிடைத்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன்... Read more »
இத்துணை பொருளாதார நெருக்கடியிலும் வல்லாதிக்க பெளத்த மேலாண்மையை கைவிடாத மோசமான மனநிலையை இத்தீவிலிருந்து ஒழிக்கப்பட முற்போக்கு சக்திகள் முன்வர வேண்டும் என அகில இலங்கை சைவ மகா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை சைவ மகாசபை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே... Read more »
புலோலியூர் தமிழ் அறிஞர்களில் ஒருவரான தமிழ்த் தாத்தா கந்த முருகேசனாரின் 57ஆவது நினைவு தினம் செவ்வாய்கிழமை நினைவு கூரப்பட்டது. இன்று காலை 9 மணியளவில் மந்திகைச் சந்தியில் உள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு சிலையை நிறுவிய புலோலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினரால் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டன.... Read more »
திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பூறல் சீனன்வெளி ஆகிய கிராமங்களில் இன்று மாலை 4.30மணியளவில் சிறிய அளவிலான சூறாவளிக் காற்றின் காரணமாக 29வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மரங்கள் முறிந்து விழுந்தமையினால் உந்துருளி ஒன்றும் சேதமடைந்துள்ளது. பாரிய இரைச்சலுடன் சூறாவளித் தாக்கம் ஆரம்பித்த... Read more »