முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்..! அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது… |

நேற்று நள்ளிரவு முதல் அமுலுாகும் வகையில் முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதி விசேட வர்த்தமானி அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றது. இதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச... Read more »

ஐ.நா. பிரேரணையை தடுப்பதே அரசின் நோக்கம்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இம்முறை வலுவானதொரு பிரேரணை வருவதை தடுப்பதே அரசின் நோக்கமாக உள்ளது என்று தமிழ் மக்கள் தேசிய முன்ணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ” இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணம்காட்டி ஜெனிவா தொடரில்... Read more »

ஒரு லீட்டர் பெற்றோலை 250 ரூபாவிற்கு வழங்க முடியும்: சம்பிக்க ரணவக்க.

நாட்டு மக்களுக்கு ஒரு லீட்டர் பெற்றோலை 250 ரூபாவிற்கு வழங்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். உலக சந்தையில் தற்போதைய எண்ணெய் விலைகளை பார்க்கும் போது இந்த நாட்டில் தற்போதைய விலையை விட, குறைந்த விலையில் எரிபொருளை வழங்க... Read more »

யாழில் திறந்த பல்கலைக் கழக புதிய கட்டத் திறப்பு விழா!

இலங்கை திறந்த பல்கலைக்கழக யாழ்ப்பாணப் பிராந்திய நிலையத்தின் புதிய கட்டத்திறப்பு விழா இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு விருந்தினர்கள் மேள தாளங்களின் ஒலி இசையுடன் வரவழைக்கப்பட்டு ,மங்கல விளக்கேற்றலுடம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கல்வியமைச்சர் கலாநிதி.சுசில் பிரேம ஜெயந்த மற்றும்... Read more »

இலங்கைக்கு 25 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் நன்கொடை!

இலங்கைக்கான அவசர உதவித் தொகையை 75 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களாக அதிகரிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி இலங்கைக்கு மேலதிகமாக 25 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை உதவித் தொகையாக வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. Read more »

யாழ் நகரில் சந்தை கட்டடத்தில் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள புதிய சந்தை கட்டடத் தொகுதிக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த சடலம் அவதானிக்கப்பட்டு யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. விசேட தேவைக்குட்பட்ட நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த சடலத்தை மீட்டு அடையாளம் காணும்... Read more »

பாலியல் ரீதியான தொந்தரவுகளை அறிவிக்க விசேட இலக்கம் அறிமுகம்!

இணையத்தளம் ஊடாக சிறுவர்கள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுத்துபவர்கள் தொடர்பிலான தகவல்களை 1929 என்ற இலக்கத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இணையத்தளம் ஊடாக கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக,... Read more »

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா விற்பனை!

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ரத்மலானை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட... Read more »

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, ஐ.நா பிரதிநிதிகள் சந்திப்பு…!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்விற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கான பெங்கொக் அலுவலகத்தின் பணிப்பாளர் டேவிட் மஸ்னெக்யன் கார், ஐக்கிய நாடுகளின்... Read more »

சாதாரண தரத்திற்கான பாடப்பரப்பில் அடுத்த வருடம் முதல் சட்டக் கல்வி – நீதி அமைச்சர் விஜேதாச!

சட்டம் தொடர்பான அறிவு பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு , அடுத்த வருடம் முதல் சாதாரண தரத்திற்கான பாடப்பரப்பில் சட்டக் கல்வியையும் உள்ளடக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ... Read more »