யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு செல்வராஜா ரமேஸ் மதுசங்கவிற்கு..!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தினால் பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது, ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் “யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம்” இவ் ஆண்டு செல்வராஜா ரமேஸ் மதுசங்கவிற்கு வழங்கப்படுகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு... Read more »

மோசடியை மறைக்கிறதா யாழ் மாவட்ட திட்டமிடல் பிரிவு..? மூன்று மாதங்கள் கடந்தும் தகவல் அறியும் சட்டத்திற்கு பதில் இல்லை.

மண்டதீவுக் கடற்கரையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மண்டதீவு சுற்றுலா மையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் நீர்த்துப்போன நிலையில் யாழ் மாவட்ட செயலக திட்டமிடல் கிளைக்கு வழங்கப்பட்ட தகவல் அறியும் கோரிக்கைக்கு  3 மாதங்கள் கடந்தும் பதில் வழங்கவில்லை. கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் அமைச்சு ஒன்றில்  சுமார் 8... Read more »

கல்மடுவில் நள்ளிரவில் பணம் நகை திருட்டு…!

தருமபுரம் பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட  கல்மடு நகர் பகுதியில் (06.10.2022) இன்றைய தினம் இரவு வீட்டு உரிமையாளர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளை வீட்டுக் கூரையைப் பிரித்து வீட்டில் பாதுகாப்பாக  வைக்கப்பட்டிருந்த  ஐந்து பவுன் பெறுமதி மிக்க தங்க நகைகளும், நாற்பத்தி ஒன்பது ஆயிரத்து ஐநூறு ... Read more »

மக்கள்  கிழர்ந்தெழும்   போதுதான் எங்களுக்கான விடுதலையை வென்றடுக்க முடியும்…! வேலன் சுவாமிகள்.

மக்கள்  கிழர்ந்தெழும்   போதுதான் எங்களுக்கான விடுதலையை நாங்கள்  வென்றடுக்க முடியும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரியக்க ஒருங்கிணைப்பாளர் வணக்கத்துக்குரிய  வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்05/10/2022  இந்திய இலங்கை கூட்டு சதி மூலம் கொல்லப்பட்ட குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட 12. பேரின்... Read more »

இந்திய மருந்து நிறுவனத்தின் மருந்தை அருந்திய சிறார்கள் இறப்பு.

காய்ச்சல், தடிமன் மற்றும் இருமலை குணப்படுத்துவதற்காக மருத்துவ பரிந்துரைக்கு அமைய வழங்கப்பட்ட இந்திய மருந்து நிறுவனம் ஒன்றின் பாணி மருந்தை அருந்திய கெம்பியா நாட்டை சேர்ந்த 66 சிறார்கள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. Maiden Pharmaceuticals என்ற இந்திய மருந்து நிறுவனம்... Read more »

யாழ்.மானிப்பாயில் கத்தியை காண்பித்து மிரட்டி ஆசிரியரிடம் வழிப்பறி..! மூவர் கைது

மானிப்பாயில் வீதியில் வழிமறித்து கத்தியை காண்பித்து மிரட்டி ஆசிரியரின் நான்கரை பவுண் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பிரபல பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் உந்துருளியில் வீடு திரும்பிய போதே இந்த வழிப்பறி கொள்ளை கத்திமுனையில் இடம்பெற்றது என்று... Read more »

ரணில் விக்ரமசிங்கவின் அதிரடி நடவடிக்கை! விசேட வர்த்தமானி வெளியீடு

ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை ஆகியன பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஆட்பதிவுத் திணைக்களம்,... Read more »

பல்கலைக்கழகங்களினுள் அரசியல் தீயை மூட்டாதீர்! சுரேன் ராகவன் வலியுறுத்தல்

பல்கலைக்கழகங்களினுள் அரசியல் தீயை மூட்ட வேண்டாம் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் வலியுறுத்தியுள்ளார். பல்கலைக்கழகத்திலோ – வெளியிலோ வன்முறைக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது, ஒருவரது மனித உரிமையை விட 99 வீதமானோரின் மனித உரிமை தொடர்பிலேயே கவனம் செலுத்துவோம் என்றும் அவர்... Read more »

மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

மினுவாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் 2 மகன்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (06) காலை 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டிலேயே இவ்வாறு மூவரும் உயிரிழந்துள்ளனர். T56... Read more »

உந்துருளி விபத்தில் 22 வயது இளைஞன் பலி..! யாழ் கொட்டடியில் சம்பவம்

யாழ் நகர பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொட்டடி லைடன் சந்தி பகுதியில் யாழ்ப்பாண நகரில் இருந்து கொட்டடி நோக்கி வேகமாக பயணித்த உந்துருளி வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி குறித்த... Read more »