பூனைத்தொடுவாயில் படுகொலை செய்யப்பட்ட 10 பேரின் 29 வது நினைவேந்தல்……!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பூனைத்தொடுவாய் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை கடலில் வைத்து  1994 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 10. பேரின் 29 வது நினைவேந்தல் இன்று  வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் நினைவேந்தல் இடம் பெற்றது. கட்டைக்காடு சென்மேரிஸ்விளையாட்டுக் கழக தலைவர் ... Read more »

மட்டக்களப்பில் டெங்கால் 22 வயது இளைஞன் உயிரிழப்பு ஒரே நாளில் 14 பேர் வைத்தியாலையில் அனுமதி – மட்டக்களப்பு பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் குனசிங்கம் சுகுணன்

மட்டக்களப்பு ஏறாவூரில் டெங்கு நுளம்பு நோய்க்கு இலக்காகி போதனா வைத்தியசாவை அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 22 வயது இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை (18) அதிகாலை உயிரிழந்துள்ளதாகவும் மாவட்டத்தில் நேற்று மட்டும் 14 பேர் டெங்கு நுளம்பு நோய்தாக்கத்தினால்... Read more »

மருதங்கேணியில் திடீரென தோன்றிய சிவலிங்கம்…..!

மருதங்கேணி புதுக்காடு வீதியில் மருதங்கேணி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் இரவோடு இரவாக சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது. இன்று காலை வீதியால்  பயணித்த மக்கள் சிவலிங்கத்தை அவதானித்துள்ளனர். இந் நிலையில் பிரதேச மக்கள் சென்று வழிபாடுகளை ஆற்றி வருகின்றனர்.  Read more »

ஆதன வரி அறவீட்டில் முறைகேடு பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் அறவிடப்படுகின்ற ஆதன வரி அறவீட்டில் முறைகேடு இடம்பெற்று தன்னிடம்  ஒரே காலப்பகுதிக்கு இரண்டு தடவைகள் அறவிட்டுள்ளதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட  திருவையாறு கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார். தன்னிடம் 2021 ஆம் ஆண்டுக்கு 29.12.2022 திகதியில்... Read more »

விசுவமடு நாச்சிக்குடா பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்குள் நுழைந்த யானைகள் – பயன்தரும் மரங்கள் அழிவு

விசுவமடு நாச்சிக்குடா பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்குள் நுழைந்த யானைகளால் பயன்தரும் மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குறித்த கிராமத்தில் நேற்று இரவு நுழைந்த காட்டு யானைகள் இவ்வாறு அழிவை ஏற்படுத்தியதுடன், தம்மை அச்சுறுத்தியதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். 4 காணிகளில்... Read more »

மக்களின் வாக்குரிமையை மீறினால் சட்ட நடவடிக்கை:எதிர்க்கட்சி எச்சரிக்கை

தேர்தல் என்பது மக்களின் அடிப்படை உரிமை. அதனைத் திட்டமிட்டுக் காலம் தாழ்த்துவது சட்டவிரோத செயற்பாடாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மக்களின் வாக்குரிமையை மீறும் வகையில் அரசாங்கம் செயற்படுமாயின் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்... Read more »

வெற்றிலைக்கேணி பகுதியில் இந்திய இழுவை மடி படகுகளால் இரண்டு மீனவர்களுக்கு சொந்தமான 20 வலைகள் நாசம்…!

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி  பகுதியில் இந்திய இழுவை மடி படகுகளால்  இரண்டு மீனவர்களுக்கு சொந்தமான 20 வலைகள் நாசமாக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு  9.00 மணியளவில் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில்  2 கிலோ மீற்றர் தொலைவில் உள்நுழைந்த இந்திய இழுவை மடி படகுகள் குறித்த மீனவர்களின் வலைகளை... Read more »

திருடப்பட்ட மாட்டினை இறைச்சிக்காக வெட்டிய ஒருவர் பளை பொலீசாரினால் கைது

பளை வண்ணாங்கேணி பகுதியில் திருடப்பட்ட. மாடு ஒன்றினை இறைச்சிக்காக வெட்டிய ஒருவரை நேற்றிரவு பளை பொலீசார் கைது செய்துள்ளனர். அதே பகுதியில் திருடப்பட்ட மாடு ஒன்றினை இறைச்சிகாக வெட்டுவதை அறிந்த மாட்டை களவு கொடுத்தவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன்... Read more »

கல்லுண்டாய் இயற்கை உரம் உற்பத்தி தொழிற்சாலைக்கான முகாமைத்துவ மென்பொருள் நேற்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது

நமது உழைப்பு அமைப்பின்  நிதி  அனுசரணையில் வலிகாமம் தென்  மேற்க்கு பிரதேச சபையின் கல்லுண்டாய் இயற்கை உரம் உற்பத்தி தொழிற்சாலைக்கான முகாமைத்துவ மென்பொருள் நேற்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. வலிகாமம் தெற்க்கு மேற்க்கு பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன் தலமையில் மானிப்பாயில் உள்ள அதன் தலமையக... Read more »

ஜனாதிபதி வெளியிட்ட அதிவிஷேட வர்த்தமானி

மின்சாரம், பெற்றோலியம், எரிபொருள் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார். 1979 ஆம் ஆண்டின் இல.61 இன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2ஆவது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.... Read more »