மக்களின் வாக்குரிமையை மீறினால் சட்ட நடவடிக்கை:எதிர்க்கட்சி எச்சரிக்கை

தேர்தல் என்பது மக்களின் அடிப்படை உரிமை. அதனைத் திட்டமிட்டுக் காலம் தாழ்த்துவது சட்டவிரோத செயற்பாடாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மக்களின் வாக்குரிமையை மீறும் வகையில் அரசாங்கம் செயற்படுமாயின் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ‘சட்டம் மற்றும் அரசமைப்புக்கமைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக அரசாங்கம் சட்டவிரோதமாகச் செயற்படுமானால் நாம் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்போம். அரசாங்கத்திற்கு சட்டவிரோதமாகச் செயற்பட முடியாது. தேர்தல் என்பது மக்களின் அடிப்படை உரிமை. அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு நீதிமன்றத்தினுடையதாகும். அதற்கமைய நீதிமன்றம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் என்று நம்புகின்றோம். பொருளாதாரத்தை சீரழித்ததன் பின்னர் துரித தீர்வைக் காணமுடியாது. ஓரிரு வருடங்களில் இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு கண்டுவிட முடியும் என்று எண்ணவேண்டாம். அவ்வாறான துரித தீர்வு எதுவும் இல்லை. நாட்டில் தற்போது ரூபாவும் இல்லை, டொலரும் இல்லை. இன்னும் நீண்ட காலத்திற்கு எவ்வித பேதமும் இன்றி அனைவரும் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டும். இலங்கை ஒரு பௌத்த நாடாகும். எனவேஇ புத்த சாசனத்தைப் பாதுகாப்பவர்களையே மக்கள் தெரிவு செய்வர். கடந்த காலங்களில் சுமார் 50 பௌத்த தேரர்களைக் கொலை செய்த ஜே.வி.பிக்கு மக்கள், ஆட்சி அதிகாரத்தை வழங்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews