டொலரின் மதிப்பில் கடும் வீழ்ச்சி! மின் கட்டணத்தை 30 வீதத்தால் குறைக்கலாம்

இலங்கை மின்சார சபையினால் மதிப்பிடப்பட்ட மின்சாரத் தேவைக்கு பதிலாக தற்போது, குறைந்த தேவையே காணப்படுகின்றது. இதனால், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 30 சதவீதத்தால் மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் அவர்... Read more »

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டதில் உயிரிழப்பு

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. மாமனாருக்கும் மருமகனுக்கும் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றியதில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரிந்திருந்த தனது மனைவியை பார்க்க சென்ற குறித்த நபரை, மனைவியின் தந்தை வழிமறித்துள்ளார். இதன்போது இருவருக்குமிடையில் முரண்பாடு... Read more »

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைவடைகின்றது!

நாட்டில் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் பட்சத்தில் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் எரிவாயு மற்றும் விறகுகளை பயன்படுத்தி பேக்கரி உரிமையாளர்கள் தமது உற்பத்தியை மேற்கொண்டு வருவதாகவும், இந்நிலைமையை... Read more »

யாழ். போதனா வைத்தியசாலையின் கழிவுகளை எரிப்பதற்கு இடம் வழங்கிய சிவபூமி!

யாழ். போதனா வைத்தியசாலையின் கழிவுகளை தகனம் செய்வதற்கு சிவ பூமி அறக்கட்டளையினர் காணியை வழங்கியுள்ளதாக செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் தெரிவித்தார். நேற்றையதினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் ஓவிய கண்காட்சியில் கலந்து கொண்ட பின்னர் விருந்தினர் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.... Read more »

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் வீட்டுக்கு தீ வை்த்த நபர்கள் – வீடு மற்றும் சொத்துக்கள் எரிந்து நாசம்…!

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் வீட்டுக்கு தீ வைத்த நபர்களால் வீடு மற்றும் சொத்துக்கள் எரிந்து நாசமடைந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இனந்தெரியாத நபர்கள் குறித்த வீட்டுக்கு ரயர் இட்டு தீ வைத்துள்ளனர். இதேவேளை வீட்டின் பிரதான வாயில் வாளினால் வெட்டப்பட்டும் உள்ளது.... Read more »

சர்வதேச கண்ணிவெடி அகற்றும் நாளான இன்று விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது

சர்வதேச கண்ணிவெடி அகற்றும் நாளான இன்று விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான பணியில் ஈடுபடும் பணியாளர்களை கௌரவப்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போட்டியில், ஆர்வத்தடன்... Read more »

எமது போராட்டத்தினை நசுக்குவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் – வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் குற்றச்சாட்டு

எமது போராட்டத்தினை நசுக்குவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் குற்றச்சாட்டுகின்றனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க தலைவி யோகராசா கனகரங்சினி கிளிநொச்சியில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குற்றம் சாட்டினார்... Read more »

கடற்படையினராலும் அவர்களிற்கு காணியினை அளவீடு செய்து வழங்குவதாலும் கிராமத்தில் தொழில் புரிவோர் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் – அன்னராசா தெரிவித்துள்ளார்

கடற்படையினராலும் அவர்களிற்கு காணியினை அளவீடு செய்து வழங்குவதாலும் கிராமத்தில் தொழில் புரிவோர் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதுடன் எதிர்காலத்தில் நங்கூரமிடும் துறைமுகங்கள் போன்றவற்றை அமைக்கவும் இடையூறாக அமையுமென கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாரத்தனை தம்பாட்டி கடற்படையினரிற்கு... Read more »

இலங்கை மீனவர்கள் இருவர் இந்தியாவில் கைது!

இன்றைய தினம் இலங்கை மீனவர்கள் இருவர் இந்திய எல்லைக்குள் உள் நுழைந்ததால் இந்திய கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்கள் பயணித்த படகுகள் இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் குரு நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

அத்தியாவசிய பொருட்கள் உட்பட இறக்குமதி பொருட்கள் தொடர்பான தகவல்

அத்தியாவசிய பொருட்கள் உட்பட இறக்குமதி பொருட்களின் மொத்த விலை தற்போது பத்து சதவீதம் அளவில் வீழ்ச்சி கண்டிருப்பதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு இணைவாக ரூபாவின் பெறுமதி ஸ்திரத்திரமடைந்துள்ளமையே இதற்கான காரணமாகும். எனினும் பொருட்களின் மொத்த விலை குறைந்துள்ள போதிலும்... Read more »