ஆனைக்கோட்டையில் கசிப்புடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மானிப்பாய் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 6.5... Read more »

யாழ். மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் வடக்கு கிழக்கு மாகாணம் தழுவியரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார பீட மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. காலை எட்டுமணியளவில் கிழக்கு பல்கலைக்கழக முன்றலில்... Read more »

பதவிகளுக்காக விலை போகிறவர்களை ஆளுநராக்க வேண்டாம் – ஐக்கிய மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்பாளர் வேண்டுகோள்

ஜனநாயகத் தேர்தலை நிறுத்தி பதவிகளுக்காக விலை போனவர்களை வட மாகாண ஆளுநராக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வன்னியசிங்கம் பிரபாகரன் தெரிவித்தார்.  இன்றைய தினம் சனிக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு... Read more »

மணிவண்ணனின் அலுவலகத்திற்கு முன்னால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்றையதினம், முன்னாள் யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணனின் அலுவலகத்திற்கு முன்னால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது பலரும்... Read more »

பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த இளம் கர்ப்பவதி பிரசவத்தின் பின்னர் பரிதாபமாக உயிரிழப்பு ..!

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாட்டாளிபுரக் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி இராஜகோபால் என்கின்ற 24 வயதுடைய இளம் கர்ப்பிணித் தாயொருவர் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களின் சீரானதும் நேர்த்தியானதுமான மருத்துவ சுகாதாரப் பராமரிப்புக்களின் பின்னர் நேற்று முன்தினம்... Read more »

யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல்…..!

யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின்  இரண்டாம் நாள் நினைவேந்தல்  இன்று மதியம் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத்தூபியில், பல்கலைக்கழக மாணவர்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. Read more »

அனைத்து ஆசிரியர் இடமாற்றங்களையும் உடனடியாக அமுல்படுத்தவும் – கல்வியமைச்சு

தற்போதைய ஆசிரியர் இடமாற்றத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து பாடசாலை நிர்வாகங்களையும் கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.இது தொடர்பான கடிதம் அண்மையில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் வழங்கப்பட்டது.2022 வருடாந்த மற்றும் பத்தாண்டு இடமாற்றத்தின் கீழ் வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகளின்படி, இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அவர்களது... Read more »

அம்பியூலன்ஸ் – மோட்டார் சைக்கிள் விபத்து ! ஒருவர் பலி !

மீப்பே – இங்கிரிய வீதியின் பிட்டும்பே பகுதியில் அம்பியூலன்ஸூம் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்திற்குள்ளானதில் 32 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் காயமடைந்த மற்றுமொரு நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அம்பியூலன்ஸின்  சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். Read more »

நெல்லியடி பேருந்து நிலைய பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு…!

முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சியினூடாக அடுத்த சந்ததிக்கு வரலாற்றினை எடுத்து செல்லுகின்ற செயற்திட்டம் இன்றும் இலங்கை தமிழரசு கட்சியின் இளயயஞர் அணியினரால் இன்று  காலை 8:30 மணியளவில் நெல்லியடி பேருந்து நிலைய  பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலமையில் இளைஞர்... Read more »

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு…!

இன்றையதினம் யாழ்ப்பாணம், முலவைச் சந்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்து வழங்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் வட்டார அமைப்பாளர் இரத்தினம் சதீஸ் வழங்கப்பட்டது தலையில் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. இதில் பங்கெடுத்த பலரும் உணர்வு பூர்வமாக, முள்ளிவாய்க்கால் கஞ்சியை... Read more »