நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு..!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக... Read more »

நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் உண்டியல் உடைத்து திருட்டு

நேற்று முன்தினம் யாழ்ப்மாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட (30) நல்லூர் வீரமாகாளி ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது. அத்துடன் வசந்த மண்டபத்தில் இருந்த ஒரு தொகைப் பணமும் களவாடப்பட்டுள்ளது. குறித்த திருட்டுச் சம்பவத்துடன் ஆலயத்தில் நெருங்கிச் செயற்பட்டவர் சம்பந்தப்பட்டமை சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது. இந்நிலையில்... Read more »

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் போராட்டம்..!(video)

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்ட பேரணியொன்றை யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுத்தனர்.வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 30.08.2023  காலை  பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகிய இப் போராட்டம் அங்கிருந்து பேரணியாக யாழ்ப்பாண நகரைச் சுற்றி,... Read more »

அன்னதான அறப்பணிகளை 30. ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் மோகன் சுவாமிகளுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்….!

செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்திற்க்கு செல்லும்  அடியவர்க்கெல்லாம் பசி போக்குதல், மற்றும் ஆண்மீக அறப்பணிகளை தினந்தினம் ஆற்றிக் கொண்டிருக்கும் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகளுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரவித்துக் கொள்வதுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக அடியார்க்கு அன்னதானம் வழங்கும்... Read more »

சாதாரண சிங்கள குடிமகன் இங்கே வந்து வீடு கட்டுவதை நாங்கள் எதிர்க்கவில்லை – சுகாஷ்.

சட்ட விரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான எங்களது போராட்டம் தொடர்ந்து கொண்டுள்ளது. நாங்கள் சிங்கள மக்களுடைய காணிகளை ஆக்கிரமிக்கவும் இல்லை. அவர்களுடைய வழிபாட்டு இடங்களை தகர்க்கவும் இல்லை.  அவர்களுடைய வழிபாட்டு இடங்களை தகர்த்துவிட்டு அங்கு எங்களுடைய வழிபாட்டு இடங்களை அமைக்கவும் இல்லை. இவ்வாறு தமிழ்... Read more »

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் பார்வையாளர்களாவதே பொருத்தம் – சரவணபவன் ஆலோசனை.

சிங்கள ஆட்சியாளர்கள் யாரும் எங்கள் குரல்களைச் செவிமடுக்கத் தயாரில்லை. போதாததற்கு தமிழ் வாக்குகள் இல்லாமலேயே வெல்லலாம் என்ற வெறி அவர்களுக்கு ஊட்டப்பட்டால் தமிழர்கள் பக்கம் திரும்பியும் பார்க்க மாட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒருவரை தமிழ் மக்கள் ஏன் ஆதரிக்கவேண்டும்? இவ்வாறு,... Read more »

முட்டை விலையில் வீழ்ச்சி!

களுத்துறை மாவட்டத்தில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் 35 ரூபாயாக முட்டை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, சாதாரண கடைகளிலும் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். தற்போது, உள்ளூர் சந்தையில் உற்பத்தி செய்யப்படும் முட்டையின் விலையும் 35 ரூபாய் வரை குறைந்துள்ளது. இதேவேளை,... Read more »

அபராதம் செலுத்தினால் அடையாள அட்டை!

நாட்டில் 40 வயதிற்கு மேற்பட்ட அடையாள அட்டை இல்லாமல் இருப்பவர்கள் 2,500 ரூபா அபராதமாகச் செலுத்திய பின்னரே, தேசிய அடையாள அட்டையைப் பெற வேண்டுமென ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக தேசிய அடையாள அட்டை பெறாத குற்றத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்ப்பதற்காக இந்த அபராதம்... Read more »

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணி மீள ஆரம்பம்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளை, எதிர்வரும் 5 ஆம் திகதி மீள முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் கடந்த 8 ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டு அதற்கான திட்டங்கள் 17 ஆம் திகதி... Read more »

950 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

இராணுவத்தினரல் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, நேற்று (30) காலை தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைகாடு பகுதியில், கண்டிப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக, கிளிநொச்சி – கட்டைக்காடு பகுதியில்  சந்தேகத்திற்கு இடமான முறையில்   நின்றதையடுத்து பொலிசாரல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.... Read more »