இன்றைய வானிலை முன்னறிவிப்பு..!

20 மே 2024 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது தீவு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர்... Read more »

அதிகரிக்கும் காற்றின் வேகம்..! அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

தென்மேல் பருவப்பெயர்ச்சிக்குரிய  காலநிலை படிப்படியாக இலங்கையை ஊடறுப்பதனால் நிலவுகின்ற காற்றும் மழையுடனான  வானிலையையும் தொடரக்கூடுமென  எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல்... Read more »

துணவியில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையினால் பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் வட்டுக்கோட்டை துணவியில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் தலைமையில் நேற்று முன்தினம் 18/05/2024 மாலை 5 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. இதன் பொழுது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூறி  நாடாளுமன்ற... Read more »

மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் கோவில் ஒன்றின் கூரை முழுமையாக சேதம்!

மழையுடன் வீசிய காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் கூரை நேற்று முன்தினம் சனிக்கிழமை  முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதா யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/21 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஆலயம்... Read more »

ஜனாதிபதியின் வடக்கு விஜயம் தொடர்பான கலந்துரையாடல்…!

ஜனாதிபதியின் வடக்கு மாகாணத்திற்கான விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  (19/05/2024) இடம் பெற்றுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில்... Read more »

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

இன்று நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் மீள் அறிவித்தல் வரை சிறிய படகுகளின் ஊடாக மீன்பிடியில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. கடலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதன்படி, அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டில்... Read more »

முள்ளிவாய்க்கால் நினைவு தின நினைவேந்தலை முன்னிட்டு மட்டு நகரில் பேரணி…!

முள்ளிவாய்க்கால் நினைவு தின நினைவேந்தல் நிகழ்வு இன்று(18)  காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர் நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து வெள்ளைக் கொடியை ஏந்தியவாறு காந்தி... Read more »

சர்வமத தலைவர்களின் பங்கேற்புடன் கிளிநொச்சியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் நிகழ்வு…!

கிளிநொச்சி மாவட்ட மக்கள் சமூக நிறுவனத்தின் ஏற்பாட்டில், யுத்தத்தால் இறந்த அனைத்து மக்களையும் நினைவுகூறும் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் இன்று(18)  காலை 11 மணியளவில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், சர்வமத தலைவர்கள் மற்றும் பெருமளவான மக்கள் இதில் கலந்து... Read more »

கண்ணீர் மழையில் நனைந்த முள்ளிவாய்க்கால் மண்…!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று(18)  தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்றையதினம் காலை 10.31 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவு தின பிரதான நிகழ்வுகள் ஆரம்பமாகியது. முதலில் அகவணக்க... Read more »

முள்ளிவாய்க்கால் நினைவு தின நினைவேந்தல் நிகழ்வில் சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் பங்கேற்பு…!

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்றையதினம்(18)  இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் நிகழ்வில், சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னெஸ் காலமார்ட் (Agnès Callamard)   கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மலர் தூவி வணங்கினார். இதேவேளை  வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு... Read more »