படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜீ.நடேசன் அவர்களுக்கு வடமராட்சி ஊடக இல்லத்தில் நினைவேந்தல்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுக் குழுவால்  படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 20ஆவது நினைவேந்தல் 31/05/2024 நேற்று  வெள்ளிக்கிமை யாழ்ப்பாணம்  வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றது. யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தலைவர் கு.மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ஜீ.நடேசன் அவர்களது... Read more »

எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் இனிவரும் காலத்துக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் – யாழ் போதனா வைத்தியசாலை அசம்பாவிதம் குறித்து அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

யாழ் போதனா வைத்தியசாலையின் மகிமையையும்  ஊழியர்களின் பாதுகாப்பையும் கருதி அடாவடியில் ஈடுபடுபட்ட நபர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இனிவரும் காலத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்படாத வகையிலான முன்னுதாரணமாக குறித்த நடவடிக்கை இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.... Read more »

30 லீற்றர் கசிப்பினை புத்தகப்பையில் எடுத்து வந்த நபர் கைது…!

30 லீற்றர் கசிப்பினை புத்தகப்பையில் எடுத்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அவர்களின் கீழ் இயங்கும் குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேக நபர் இன்று அதிகாலை யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்  . யாழ்ப்பாண... Read more »

தமிழ் பொது வேட்பாளருக்கு யாழ் பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம் ஆதரவு, ஆனால் நிபந்தனைகளும் முன்வைப்பு…!

தமிழ் பொது வேட்பாளருக்கு சில நிபந்தனைகளுடன் ஆதரவளிப்பதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. பேரம் பேசும் அரசியல் வேண்டாம், திட சித்தத்துடன் முன்நகர்வோம் என அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சில நிபந்தனைகளும் முன்வேக்கப்பட்டுள்ளன. அதன் முழு... Read more »

யாழ்ப்பாணம் வணிகர் கழகமும் ஆதரவு..!

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான மக்கள், சமூக அமைப்புகளுடனான உரையாடலின் ஒரு கட்டமாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை 27.05.2024 மாலை யாழ்ப்பாணம் வணிகர் கழகத்துடனான சந்திப்பு நடைபெற்றது. பொதுவேட்பாளர் விடயத்தில் தொடர்ச்சியான செயற்பாட்டில் இருக்கும் சமூக (சிவில்) அமைப்புகளின் கூட்டிணைவு சார்பாக... Read more »

யாழ். மாவட்ட கூட்டுறவு சபையினரும் தமிழ் பொது வேட்பாளர் விடயத்துக்கு பூரண ஆதரவு..!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பிலான சமூக அமைப்புகளுடனான தொடர்ச்சியான சந்திப்பும் கலந்துரையாடலும் வரிசையில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம்  யாழ் மாவட்ட கூட்டுறவு சபையினருடன் பொதுவேட்பாளர் தொடர்பில் செயற்படும் சிவில் சமூக கூட்டிணைவு செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது... Read more »

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிக்க தற்காலிக தடை.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.83 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு தற்காலிக தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ள பகுதியில் சுமார் 55 ஆயிரம் சதுர அடி காணியில் கண்ணிவெடிகள் காணப்படகூடும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட  செயலகத்தால் உரிய தீர்வு... Read more »

சிறப்பாக இடம் பெற்ற மந்திகை கண்ணகி அம்மன் ஆலய வைகசிப் பொங்கல்…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை கண்ணகை அம்மன் ஆலய வைகாசி பொங்கல் இன்று செவ்வாய்க்கிழமை சிறப்பாக இடம் பெற்றுள்ளது. காலை முதல் ஆரம்பமான திருவிழவாவில் பக்தர்கள் நூற்றுக் கணக்கில் கலந்து கொண்டு வழிபட்டதுடன் பல பக்தர்கள் காவடி, தூக்குக் காவடி, பாற்செம்பு, கரகம் என்பன ஆடி... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழா…! 

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப்  பெருவிழா நேற்று முன்தினம்  காலை 9:00 மணியளவில்  சந்நிதியான் ஆசசிரமத்தில் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள், மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் ஆ.சிவநாதன் தலமையில் இடம் பெற்றது. பஞ்ச புராணம் ஓதுதலுடன்,  ஆரம்பமான... Read more »

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஜூன் 9 இல் பகிரங்கக் கருத்துப் பரிமாற்றம் – சுமந்திரன்

“ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் சம்பந்தமாக எதிர்வரும் ஜூன் மாதம் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பொது வெளியில் பகிரங்கமாக ஆரோக்கியமான முறையில் கருத்துப் பரிமாற்றம் நடைபெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.” – இவ்வாறு யாழ். ஊடக... Read more »