வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை 30/08/2024  நடாத்தப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறும் , கறுப்புத் துணியால் வாயைக்கட்டியும் போராட்டத்தில்... Read more »

ரணில் தமிழ் மக்களை ஏமாற்றுவார் பொது வேட்பாளருக்கே எனது ஆதரவு, நான் ரணிலின் ஆள் அல்ல – விக்னேஸ்வரன் தெரிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க பேச்சில் மட்டும் வாக்குறுதியை வழங்குவார் ஆனால் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்ய மாட்டார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று புதன்கிழமை யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்... Read more »

தேர்தல் பரபரப்பில் ஐ.நா விடயங்களை மறந்து விட வேண்டாம் – தமிழ்த் தேசியத்  தரப்பினருக்கு ரெலோ கோரிக்கை 

நடைபெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புக்களில் தமிழ் மக்களின் பிரதான விடயமான ஐ.நா அமர்வுகளைப் புறந்தள்ளி விட வேண்டாம் என ரெலோ கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 57 ஆவது அமர்வு நடைபெற இருக்கும் இவ்வேளையில் ஐ.நா... Read more »

தமிழ் பொது வேட்பாளர், திலீபனுக்கு அஞ்சலியுடன் கிளிநொச்சி பரப்புரை, பளையில் அமோக வரவேற்பு..!,

ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன்  தியாகி திலீபன் அவர்களது நினைவாலயத்திற்க்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரையாக தமிழ்ப் பொது வேட்பாளரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் பரப்புரை  பயணத்தின் தொடர்சியாக   நேற்றையதினம் தியாகி... Read more »

யாழில் மனைவி உயிரிழந்த விரக்தியில் கணவனும் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

யாழில் மனைவி உயிரிழந்த விரத்தியால் கணவனும் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். புது வீட்டுத்திட்டம், நாவற்குழி, கைதடி பகுதியை சேர்ந்த  மனுவல் சூசைமுத்து (வயது 72) என்பவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவரது மனைவி ஒரு வருடத்திற்கு முன்னர்... Read more »

வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் இரதோற்சவம்!

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த இரதோற்சவ திருவிழாவானது இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை மூல மூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, வசந்தமண்டபத்தில் எழுந்தருளியாக இருக்கும் வரதராஜப் பெருமாளுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேக... Read more »

நல்லைக் கந்தனின் சூர்யோதய திருவிழா!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லையம்பதிஅலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் பத்தொன்பதாவது திருவிழாவான சூர்யோதய திருவிழா திருக்கார்த்திகைத் திருவிழா இன்று காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார வேலனுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, வசந்த மண்டபத்தில் அருள் பாலிக்கும் அலங்கார முருகன்,... Read more »

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

கிளிநொச்சி மாவட்ட ஆவணி மாத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(27) நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்... Read more »

முன்னாள் போராளிகளின் தியாகத்தை அற்ப சலுகைகளுக்காக விலை பேசாதீர் – சபா குகதாஸ் 

இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினையில்  தமிழ் மக்களின்  அரசியல் விடுதலைக்காக போராடிய முன்னாள் போராளிகளின் தியாகத்தை அதே கட்டமைப்புக்குள் இருந்து தற்போது சிங்கள பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்களுடன் மறைமுகமாக கைகோர்த்து கடந்த காலங்களில் செயல்பட்ட சிலர் தற்போது வெளிப்படையாக அவர்களுக்கான ஆதரவினை கோருவதுடன் அவர்கள்... Read more »

எல்லைத்தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது..!

எல்லையை தாண்டி மீன்பிடியில் ஈடிபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்களை  இலங்கையின் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், இலங்கை வடக்கு பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தரப்புக்கள் தெரிவித்துள்ளது. இதன்போது நாகப்பட்டிணத்தை சேர்ந்த... Read more »