நாட்டை கட்டியெழுப்ப தற்போதைய பொருளாதார கொள்கைகளை பின்பற்றுவது அவசியமானதாகும். – சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் (IMF) தெரிவிப்பு 

நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்  குழு நேற்று(14.01.2024) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழு, வர்த்தகப்... Read more »

தமிழ் மக்களிற்கு தேவை கதிர்காமர் போன்ற சட்ட புலமையாளர்கள் அல்ல, தமிழ் அரசிற்கு தேவை அம்மா பூபதி போன்ற தியாகிகளே…! விசரன்.

இலங்கை தமிழரசு கட்சிக்கான தலமையை தெரிவு செய்வதற்க்கான ஜனநாயக ரீதியான தேர்தல் எதிர்வரும் 28. ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தலமைக்காக போட்டியிடும் மூவர் தொடர்பிலும் பல்வேறு வாத பிரதிவாதங்கள் இடம் பெற்றுவருகின்றன. இலங்கை தமிழரசு கட்சி என்பது விடுதலைப் புலிகள் பல்வேறு விட்டுக்... Read more »

நுளம்புக் குடம்பிகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிலும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளிலே நாளாந்தம் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். மாகாண டெங்கு... Read more »

கசிப்பு நிலையங்களை சுற்றிவளைத்த விளையாட்டுக் கழகம்

கசிப்பு தயாரிக்கப்படும் இடங்களை சுற்றி வளைத்த காரைநகர் இழந்தென்றல் விளையாட்டு கழக வீரர்கள்.. கசிப்பு ஒழிப்புக்காக அணி திரண்டு கசிப்பு தயாரிக்கப்படும் இடங்களை சுற்றி வழைத்த காரைநகர் இழந்தென்றல் விளையாட்டு கழக வீரர்கள்.. இன்றில் இருந்து எமது கிராமங்களில் கசிப்பை ஒழிப்போமென உறுதி பூண்டுள்ளனர்.... Read more »

தைப்பொங்கலை முன்னிட்டு இராவணன் ஆண்ட இலங்காபுரி மண்ணில் மேல்மருவத்தூர் சக்தி பீடத்தினால் பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு இராவணன் ஆண்ட இலங்காபுரி மண்ணில் மேல்மருவத்தூர் சக்தி பீடத்தினால் பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இன்று காலை யாழ்ப்பாணம், நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் கலாசார மண்டபத்தில், இலங்கை மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி... Read more »

பாரம்பரியமான பண்பாட்டையும் தாய் மொழியையும் கலைகளையும் காத்திட முன்வாருங்கள் – ஆறு. திருமுகன் அழைப்பு

பாரம்பரியமான பண்பாட்டையும் தாய் மொழியையும் கலைகளையும் காத்திட முன்வாருங்கள் என கலாநிதி ஆறு. திருமுருகன் கோரிக்கை முன்வைத்துள்ளார். அவர் வெளியிட்ட பொங்கல் வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சைவத்தமிழ் மக்களின் பண்டிகைகளில் தைப்பொங்கல் விழா முதன்மையானது. இயற்கைத் தெய்வமாகிய சூரியனுக்கு... Read more »

வடக்கு,கிழக்கில் படம்காட்டிய ஜனாதிபதி,ஆளுநர்

புதிய ஆண்டு பிறந்த கையோடு ஜனாதிபதி வடக்கிற்கு வருகை தந்த அதே காலப்பகுதியில்,அவருடைய ஆளுநர் கிழக்கில் மிகப்பெரிய பண்பாட்டு விழா ஒன்றை அரங்கேற்றியிருக்கிறார். வடக்கில் ஜனாதிபதி பல்வேறு தரப்புகளையும் சந்தித்தார்.தொழில் முனைவோர்,பல்கலைக்கழகப் பிரமுகர்கள்,குடிமக்கள் சமூகம் என்று சொல்லப்பட்டவர்கள்,அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், இசைத்துறையில் விளையாட்டு... Read more »

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரும் ஈழத்தமிழர் அரசியலும்

 இலங்கை அரசியலில் தீர்வின்றி நிலைத்திருக்கும் ஓரம்சமாக ஈழத்தமிழரது அரசியல் காணப்படுகிறது. அதற்கான அடிப்படை அதிகாரமற்ற இனமாக உள்ளமையே காரணமாகும். எல்லா உயிரினங்களதும் இருப்புக்கு அதிகாரம் அடிப்படையானதாகவே உள்ளது. அதிகாரமே அரசியலாகும். அதிகாரத்தை கையாளும் செய்முறையை அரசியல் எனலாம். அதிகாரமின்றி எந்த அணுவும் அசையாது. அதிகாரத்தின்... Read more »

யாழிற்கு வரும் நீதியமைச்சர்

யாழ்ப்பாணம் – காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா நாளை 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர் கந்தசாமி கருணாகரனின் ஒருங்கிணைப்பில், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபெற்றுதலுடன் காலை 10 மணிக்கு தைப்பொங்கல்... Read more »

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் மாணவர் ஒன்றியமும் சந்திப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்திற்கும், மாணவர் ஒன்றியத்திற்கும் இடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடல் 12.01.2024 (வெள்ளிக்கிழமை) அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஊழியர் சங்கத் தலைவர் திரு.தங்கராஜா, இணைச் செயலாளர் திரு.த.சிவரூபன் உள்ளிட்ட பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பிரதிநிதிகளிற்கும், மாணவர்... Read more »