பொலிஸ் உத்தியோகத்தர் என கூறி திருட்டு!

கட்டுகஸ்தோட்டை – வட்டரந்தென்ன பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தராக தம்மை அடையாளப்படுத்தி பெறுமதியான இரத்தினக்கற்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் பக்கமூன பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடையவரே என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர், சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கற்களை... Read more »

இ.போ.ச. பேருந்து சாரதி கடத்தல்

கண்டி மாவட்டம் கம்பளை பிரதேசத்தில் பேருந்தொன்றின் சாரதி கடத்தப்பட்டுள்ளார். இன்று காலை மாவெலயில் இருந்து கம்பளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதியே இவ்வாறு கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஓடும் பேருந்தை மறித்து வான் ஒன்றில் வந்த சிலர் அவரை... Read more »

நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள்.படுகொலையின் 28ம் ஆண்டு நினைவு நாள்….!

22.09.1995 அன்று வடமராட்சிகிழக்கையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய நாள் வடமராட்சிகிழக்கில் நாகர்கோவில் மண்ணில் இடம்பெற்றது. மாணவர் இனப்படுகொலையை இலங்கை விமானப்படையின் புக்காரவிமானங்கள் அரங்கேற்றியது. அன்றைய நாட்களில் வடமராட்சிகிழக்கில் அதிகளவான மக்கள் நாகர்கோவில் கிராமத்தின் J/425. J/424 J/423 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் மக்கள்... Read more »

கொலைக் குற்றவாளிகளுக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்த சிறை அதிகாரி கைது!

பொரளை மற்றும் கலபிடமடை ஆகிய இடங்களில் இடம்பெற்ற இரண்டு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் கொழும்பு விளக்கமறியலின்  சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீட்டில் பயணப் பை,... Read more »

மன்னாரில், 3 கோடிக்கும் அதிக பெறுமதியான ஹொக்கைன் மீட்பு!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு இராஜப்பு ஜோசப் விளையாட்டு மைதானத்திற்கு அருகில், 1 கிலோ 12 கிராம் ஹொக்கையினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பொலிஸ் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம், மன்னார் மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகரின் பணிபுரைக்கு அமைவாக,... Read more »

அவுஸ்திரேலியா அனுப்புவதாக கூறி பண மோசடி – சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக பணம் செலுத்தி ஏமாற்றமடைந்துள்ளார். ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் விளம்பரங்கள் மூலமாக அவுஸ்திரேலியா செல்வதற்காக கொழும்பில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அறிமுகமாகி கட்டம் கட்டங்களாக 75 லட்சம் ரூபாவை வங்கியில் வைப்பிலிட்டுள்ளார். வங்கியில்... Read more »

பிரபல பாடசாலையின் கூரையில் பல வெடிப்பொருட்கள் மீட்பு!

மாத்தறை வெல்லமட மகிந்த ராஜபக்ஸ வித்தியாலயத்தின் பழைய கட்டிடத்தின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல வெடிப்பொருட்கள் காவல்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த கட்டிடம் புனரமைக்கப்படும் நிலையில், இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது, வெளிநாட்டு தயாரிப்பு என சந்தேகிக்கப்படும் ரீ -56... Read more »

பாராளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்: 6 பேர் கைது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் மீது நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்திய அமைதி காக்கும் படையினர் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து... Read more »

முன்னணிக்கு எதிரான வவுனியா பொலீஸாரின் விண்ணப்பம் நிராகரிப்பு….!

தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிசார் தடை கோரி வவுனியா நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த போதும், நீதிமன்றம் அதனை நிராகரித்து, குழப்பங்கள் ஏற்படாத வகையில் பொலிஸ் பாதுகாப்பினை வழங்குமாறு நேற்று (18.09) உத்தரவு பிறத்துள்ளது. தியாக தீபம்... Read more »

அகிம்சை வழியில் போராடி உயிர்த் தியாகம் செய்த ஒரு தியாகிக்கு அதே அகிம்சை வழியில், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அஞ்சலி செலுத்த முடியாத நிலை – வினோ எம்.பி கண்டனம்

அகிம்சை வழியில் போராடி உயிர்த்தியாகம் செய்த ஒரு தியாகிக்கு அதே அகிம்சை வழியில், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அஞ்சலி செலுத்த மறுப்பதும், நடுவீதியல் தாக்க முற்பட்டு கொலை செய்ய எத்தனிப்பதும் இந்த நாடு இன்னமும் இன, மத சிந்தனைக்குள்ளிருந்து மீளப்போவதில்லை... Read more »