குவைத் நாட்டில் சாரதியாக பணிபுரியும் இலங்கையர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ராஜாங்கனையைச் சேர்ந்த கே.பி.லக்ஷ்மன் திலகரத்ன என்ற 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சுடப்பட்டுள்ளார். சுமார் 8 வருடங்களாக குவைத்தில் பணிபுரிந்து வரும் இவர் இறுதியாக கடந்த 2022 ஆம்... Read more »
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் இன்று 23.02.2024 இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதோடு இதனை செய்தி சேகரிக்க சென்ற வடமராட்சி கிழக்கு ஊடகவியலாளரும் கடுமையாக அச்சுறுத்தப்பட்டார். வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும்,மருதங்கேணியில் இருந்து வெற்றிலைக்கேணி நோக்கி சென்ற மோட்டார்... Read more »
.கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, கடந்த மூன்று வருடங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 7.5 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற 21 முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை களின்போதே இந்தத் தகவல் தெரியவந் துள்ளது. இது... Read more »
கந்தளாய் -அழுத் ஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றையதினம்(22) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த பெண் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கட்டுநாயக்க விமான... Read more »
காதலர் தினத்தன்று தனது மனைவிக்கு பரிசளிப்பதற்காக 29 பவுண் நகைகளை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய கணவர் உள்ளிட்ட இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 வயதான ஆணும் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 49 வயதான பெண்ணுமே காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால்... Read more »
கடந்த 07ஆம் திகதியன்று எல்லை தாண்டி வந்து 19 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக 08 ஆம் திகதியன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்... Read more »
வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் தமிழகத்தில் தலைமறைவாகி இருந்து, மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ் திரும்புவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்... Read more »
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் இன்று 22.02.2024 பத்திற்கும் மேற்பட்ட இந்திய இழுவைமடி படகுகள் 4மீனவர்களுக்கு சொந்தமான 30 இலட்சம் பெறுமதியான வலைகளை அறுத்து இழுத்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வெற்றிலைக்கேணியில் இருந்து நேற்று (22)மீன்பிடிக்க சென்ற நான்கு படகுகள் தங்களது... Read more »
கனடாவில் இந்திய தேசியக் கொடிகளை எரித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதாவது கனடாவின் வான்கூவார் பகுதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு எதிரில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்திய தேசியக் கொடிகளை எரித்தும், வெட்டி சிதைத்தும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு... Read more »
யாழ்.பருத்தித்துறை பகுதியில் வீதியில் நேற்று (20) மாலை மாணவர்கள் இருவர் மீது, வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் குறித்த வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்... Read more »