தம்புள்ளை தண்டர்ஸ் அணியுடன் தொடர்புடைய பங்களதேஷ் பிரஜை கட்டுநாயக்கவில் கைது!

LPL போட்டியில் தம்புள்ளை தண்டர்ஸ்  அணியுடன் இணைந்து செயற்படும் பங்களதேஷ் பிரஜையான தம்மி ரஹுமான் என்ற நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (22) கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து,... Read more »

நான்கு டிப்பர்களுடன் சாரதிகள் நான்குபேர் கைது…!

அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாற்று பகுதியில்  கடந்த ் 19.05.2024 குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக... Read more »

சாவகச்சேரியில் பூசகரிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகை மீட்பு!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி பூசகரிடம் கொள்ளையடிக்கப்பட்ட ஒன்றரை பவுண் தங்க நகை இன்றையதினம் மீட்கப்பட்டது. சாவகச்சேரி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் மயூரன் தலைமையில் நிதர்சன், பொலிஸ் கான்ஸ்டபிள்களான நிருபன், சிப்னாஸ் ஆகியோர் உள்ளடங்கிய குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில்,... Read more »

கிளிநொச்சியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அரசுக்கு துணை போய்விட்டார்கள் – சுகாஷ் சீற்றம்

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக இராணுவ ஆக்கிரமிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொன்னாவெளியிலே சுண்ணக்கல் அகழ்வு என்று கூறி தமிழர்களது காணியை அபகரிக்கின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி சந்திரன் பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து... Read more »

இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழப்பு!

இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் இன்று உயிரிழந்துள்ளார். புத்துர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் இடம்பெற்ற இந்த விபத்தில் வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதியே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்... Read more »

யாழ்ப்பாணத்தில் பிறந்தநாள் யுவதி மீது வாகனத்தால் மோதி உயிரைப் பறித்த இராணுவம்!

யாழ்ப்பாணத்தில் பிறந்தநாள் யுவதி மீது வாகனத்தால் மோதி உயிரைப் பறித்த இராணுவம் பிறந்தநாளில் இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் இன்று (20) உயிரிழந்துள்ளார். வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதியே உயிரிழந்துள்ளார். புத்துர் – கனகம்புளியடி வீதியில்... Read more »

கிழக்குப் பல்கலையில் சிறிலங்கா காவல்துறையின் அடாவடிகள் மனித உரிமைகளிற்கு எதிரானது – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல்களை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 18.05.2024 (சனிக்கிழமை) அன்று முன்னெடுத்துக் கொண்டிருக்கையில் காவல் துறையின் அநாகரீக மற்றும் அடாவடியான செயற்பாடுகள் ஊடாக மனித உரிமைகளிற்கு எதிராக நினைவுகூரல் உரிமையினை மறுக்கின்ற சிறிலங்கா அரசின் செயலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாகக்... Read more »

காட்டுப்பகுதிக்குள் இ.போ.ச பஸ் சாரதி சடலமாக மீட்பு..!!

நிகவெரட்டிய – கந்தேகெதர காட்டுப்பகுதிக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று  மீட்கப்பட்டுள்ளதாக நிகவெரட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். நிகவெரட்டிய, ஹூலுகல்ல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.எம்.ருவன் சதுரிக  எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் இலங்கை... Read more »

ஈரான் தூதுவர் மீது கொழும்பில் தாக்குதல் – சந்தேகநபர், கைது..!!

இலங்கைக்கான ஈரான் தூதுவர் மீது கொழும்பில் வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அதாவது கொழும்பிலுள்ள கட்டிடத் தொகுதி ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் வைத்து இந்த தாக்குதல் நேற்றைய தினம் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலை நடாத்தியதாக கூறப்படும் கறுவாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்... Read more »

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

இறுதிக்கட்ட ஈழப்போரின்போது சிறிலங்கா இராணுவத்தினால் பாதிக்கப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை நினைவேந்தி, தமது உறவுகளை அஞ்சலிக்கும் நிகழ்வாக முன்னெடுக்கப்படும் “முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை” நினைவேந்தல்கள் வடக்கு – கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பெங்கும் உணவெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சிறிலங்கா காவல்துறை, இராணுவம் உள்ளிட்ட... Read more »