இன்று இரவு வானிலையில் மாற்றம்..!

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய... Read more »

கொழும்பில் விசேட ரயில் சேவைகள்..!

வெளி மாகாணங்களில் இருந்து கொழும்பு திரும்பும் மக்களுக்காக இன்று பிற்பகல் முதல் மேலதிக புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர்.நந்தன இண்டிபோலகே தெரிவித்தார். இன்றும் நாளையும் பதுளை, காலி மற்றும் பெலியத்த புகையிரத நிலையங்களில் இருந்து கொழும்பு கோட்டை வரை 8... Read more »

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்களுக்கு எமது இனிய புது வருட நல்வாழ்த்துக்கள்..!

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்களுக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் நாம் பெரு மகிழ்வடைகின்றோம். எமது இணையத்தளம் www.elukainews.com 34 மாதங்கள் உங்கள் ஆதரவோடு முன் நோக்கி மிக மிக வேகமாக சென்றுகொம்டிருக்கிறது. இது நீங்கள் எமக்கு கொடுத்த ஆதரவினாலேயே சாத்தியமானது.... Read more »

சிறப்பாக இடம் பெற்ற வல்லிபுர ஆழ்வார் ஆலய புது வருடப் பிறப்பு  விசேட பூசைகள்…..!

வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் இன்று பிற்பகல் புது வருடம் பிறக்கும் நேரமான 8:15 மணியளவில் விசேட பூசைகள் இடம் பெற்றன. ஆலய பிரதம குரு கணபதீஸ் வரக்குருக்கள் தலமையில் இடம் பெற்றது. இதே வேளை ஸ்ரீவல்லிபுர ஆழ்வார்... Read more »

செம்மணியில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள் – அமைவிடம் குறித்து அமைச்சர் டக்ளஸ் நேரில் ஆராய்வு!

செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெற் மற்றும் உதைபந்து மைதானங்களை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகயுடன் குறித்த பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தறிந்து கொண்டார். யாழ்ப்பாணத்தை வரவேற்கும் செம்மணி வளைவு பகுதியை அண்டிய நிலப்பரப்பில் சர்வதேச... Read more »

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கிரிஸ்டல் செரினிட்டி என்ற பயணிகள் கப்பல்..!!

கிரிஸ்டல் செரினிட்டி என்ற சொகுசு பயணிகள் கப்பல் இன்று (13) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக் கப்பல் 265 பயணிகள் மற்றும் 480 பணியாளர்களுடன் இந்தோனேசியாவிலிருந்து வந்துள்ளது. ஜப்பான், பிரேசில் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பயணிகள் அங்கு பயணம் செய்கிறார்கள், அவர்கள் இன்று... Read more »

புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விஷேட பாதுகாப்பு..!!

புத்தாண்டு காலத்தில் முன்னெடுக்கப்படும் கொண்டாட்ட நிகழ்வுகளின் போது விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு காவல்துறை தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது 14 ஆயிரம் காவல்துறை உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் கீழ் குறித்த... Read more »

ஏப்ரல் 15 ஆம் திகதி விடுமுறையா??

எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வங்கி மற்றும் வணிக விடுமுறை என்று பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண அமைச்சகம் வரையறுக்காததால் மக்கள் குழப்பத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விடுமுறை தொடர்பில் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி... Read more »

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து இன்றையதினம் 16 சிறைக்கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து இன்றையதினம் 16 சிறைக்கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில்  மட்டக்களப்பு சிறைச்சாலையில் 16 சிறைக் கைதிகள் இன்று(13)  காலை விடுதலை செய்யப்பட்டனர். மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில்... Read more »

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் இன்றைய (13)  கச்சா எண்ணெய் விலை  91 டொலர்களாக உள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் கச்சா எண்ணெய்யின் விலை 90 டொலர்களை நெருங்கிய நிலையில் 1.70 டொலர்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »