கனடாவை சென்றடைந்த அநுரவிற்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு…!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்றையதினம்(21) கனடாவுக்கு விஜயம் செய்தார். நாளை மற்றும் நாளைமறுதினம் (23, 24)  கனடாவின் ரொறொன்ரோ மற்றும் வான்கூவரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்கள் மற்றும் பல சிநேகபூர்வ சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே அநுர கனடா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவிற்கு... Read more »

வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 12 வயது மாணவன்..!

கெக்கிராவ, கனேவல்பொல வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கெக்கிராவ நெல்லியாகம பகுதியைச் சேர்ந்த 6 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் குசல யுகத் சஞ்சீவ என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில்... Read more »

சிவராத்திரியை பகலில் நடத்துமாறு கூறும் பொலிஸ்; பொசன் பண்டிகையை பகலில் கொண்டாட முடியுமா? – சார்ள்ஸ் எம்.பி.

இந்துக்களின் சிவராத்திரியை பகலில் நடத்துமாறு பொலிஸார்  கூறுவதை போன்று பௌத்தர்களின் பொசன் தின நிகழ்வை பகலில் நடத்துமாறு பொலிஸாரினால் கூற முடியுமா என  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில்  நேற்று   உரையாற்றும் போது மேற்கண்டவாறு அவர்... Read more »

போராட்டக்காரர்களின் உடலில் நீர் சத்து குறைகிறது – வைத்தியர் எச்சரிக்கை

இந்திய மீனவர்களின் அத்துமிறலைக் கண்டித்து உணவு தவிப்பு போராட்டத்தில் ஈடுபடும் நான்கு பேரின் உடலில் நீரின் அளவு குறைவடைந்து செல்வதாக பரிசோதித்த வைத்தியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாண குடாப்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை நிறுத்துமாறு கோரி கடந்த செவ்வாய்க்கிழமை நான்கு மீனவர்கள்... Read more »

பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு..! தட்டுப்பாடின்றி வழங்கவும் நடவடிக்கை

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்துள்ளார். அத்துடன், பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான விலையில் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர்... Read more »

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் இந்திய தரப்புடன் பேச்சுவார்த்தை…! அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை…!

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில முதலமைச்சர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்றையதினம்(21)  இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »

இணக்கப்பாடின்றி நிறைவடைந்த ரணில் – பசில் பேச்சுவார்த்தை..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருவருக்கும் இடையில் நேற்றைய தினம் மாலை பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தையும் எவ்வித இறுதி இணக்கப்பாடுகள் இன்றி நிறைவடைந்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.... Read more »

அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

அஸ்வசும திட்டத்தின் இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை இணையவழி முறைமைக்கு இதுவரை சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜெயந்த விஜேரத்ன தெரிவித்தார். இதற்கு மேலதிகமாக மற்றுமொரு குழுவினர் தமது விண்ணப்பங்களை பிரதேச... Read more »

ஓயில் ஏற்றிவந்த கொள்கலன் வீதியில் குடை வாய்ந்தது. ஒருமணி நேரம் போக்குவரத்து தடங்கல், தற்போது மாற்றுவழி பயணம்…..!

ஓயில் ஏற்றிவந்த கனரக வாகன கொள்கலன் ஒன்று மிருசுவில் சந்திக்கும் கொடிகாமம் பிரதேச வைத்திய சாலைக்கும் இடைப்பட்ட ஏ ஒன்பது பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்கு உள்ளகியுள்ளது. இதனால் ஏ ஒன்பது வீதியினூடான போக்குவரத்து காலை 5:30 மணியிலிருந்து 6:30 மணிவரை தடங்கல் ஏற்பட்டு... Read more »

கடும் வெப்பமான காலநிலை – கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஆபத்து!

அதிக வெப்பமான காலநிலை காரணமாக வெளியில் வேலை செய்யும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஆபத்து இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அத்தகைய ஆபத்தை எதிர்கொண்டு பணியாற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு குறைபிரசவம் மற்றும் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் எனத் தெரியவந்துள்ளது. இந்தியா – சென்னையில்... Read more »