இணக்கப்பாடின்றி நிறைவடைந்த ரணில் – பசில் பேச்சுவார்த்தை..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவருக்கும் இடையில் நேற்றைய தினம் மாலை பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இந்த பேச்சுவார்த்தையும் எவ்வித இறுதி இணக்கப்பாடுகள் இன்றி நிறைவடைந்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் தேர்தல் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை பசில் ராஜபக்ஸ, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார்.

முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டுமென்பதே ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் இந்த கோரிக்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இணக்கப்பாட்டை வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் எதிர்கால தேர்தல்கள் தொடர்பில் விரைவில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews